இந்திய அணிக்கு அஜித் அகர்கர் வைத்த ஆப்பு.. பதறியடித்த ரோஹித் சர்மா.. உள்ளே வந்த வீரர்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
துணை கேப்டன் பும்ராவுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்த தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், தற்போது மூன்று போட்டிகளுக்குமான அணியில் பும்ராவின் பெயரை தேர்வு செய்து இருக்கிறார்.
இந்த தீர்மானத்தின் பின்னணியில் கேப்டன் ரோஹித் சர்மா இருப்பதாக கூறப்படுகிறது. பும்ராவுக்கு ஓய்வு அளித்தால் இந்திய டெஸ்ட் அணி தற்போது இருக்கும் நிலையில் அது மோசமான முடிவாக இருக்கும் என்பதால் ரோஹித் சர்மா இந்த தீர்மானத்தை மறுத்து இருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆப்பு வைத்த பிசிசிஜ... விராட்உள்ளிட்ட வீரர்களின் நிலை என்ன?
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து கோலி விலகிய நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டால் மட்டுமே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியும்.
வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமார் மற்றும் முகமது சிராஜ் தலா ஒரு போட்டியில் பங்கேற்று அதில் சரியாக பந்து வீச முடியாமல், விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர்.
இப்படி இந்திய அணியில் பல்வேறு பின்னடைவுகள் இருக்கும் நிலையில், பும்ராவுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளித்தால் நிச்சயம் அது மனதளவில் இளம் இந்திய வீரர்களுக்கு அழுத்தத்தை அதிகரிக்கும்.
எனவே, பும்ராவை கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் நிச்சயம் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |