சிஎஸ்கேவின் கேப்டனாகும் ரோஹித்?... மாஸ்டர் பிளான்... பற்ற வைத்த முன்னாள் வீரர்!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 10 ஆண்டுகளாக ரோஹித் சர்மா செயல்பட்டிருந்தார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 10 ஆண்டுகளாக ரோஹித் சர்மா செயல்பட்டிருந்தார்.
அதில் ஐந்து முறை அவர்கள் ஐபிஎல் கோப்பையை வென்று உதவிய போதிலும் 17 வது ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
தோனி, ரோஹித் ஆகியோர் சிறந்த கேப்டனாக இருந்த நிலையிலும் அந்த வரிசையில் இருக்கும் ஒருவரை தூக்கிவிட்டு புதிய கேப்டனை மும்பை அணி நிர்வாகம் தேர்வு செய்திருந்தது கடும் எதிர்ப்புகளையும் சம்பாதித்து இருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேனாக மட்டும் ரோஹித் சர்மா ஆட உள்ளது நிச்சயமாக ரசிகர்களை சற்று கலங்க வைத்துள்ளது. மும்பை அணிக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்றும் கூட பல ரோஹித் ரசிகர்கள் கங்கணம் கட்டியும் வருகின்றனர்.
இதற்கிடையே அவரது வயதின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மும்பை அணி அவரை விடுவிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் ரோகித் சர்மாவின் ஐபிஎல் பயணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
“ரோஹித் ஷர்மா அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ஆடுவார். அவர் கேப்டனாக வேண்டும் என விரும்பினால் ஒட்டுமொத்த உலகமே அவருக்காக திறந்து தான் இருக்கிறது.
அவர் விரும்பினால் எந்த அணிக்கு வேண்டுமானாலும் எளிதாக கேப்டன் என்ற பொறுப்பிற்கு மாறி விடலாம். 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ரோஹித் ஷர்மா ஆட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஒருவேளை தோனி ஓய்வினை அறிவித்தால் ரோஹித் சென்னை அணியை மும்பையை போல வழிநடத்தி கோப்பையை வென்று தர வேண்டும் என்றும் விரும்புகிறேன்” என ராயுடு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |