கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு எம்பியுடன் திருமணம்... நிச்சயம் தொடர்பில் வெளியான தகவல்!
இந்திய கிரிக்கெட் அணியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரர் ரிங்கு சிங் முக்கியமானவர்.
 
                                இந்திய கிரிக்கெட் அணியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரர் ரிங்கு சிங் முக்கியமானவர்.
ரிங்கு சிங், இந்திய அணிக்காக பல போட்டிகளில் வெற்றிகரமான இன்னிங்ஸ்களை விளையாடிள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி பிரபல அரசியல்வாதி பிரியா சரோஜுடன் நிச்சயதார்த்தம் செய்யவுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
பிரியா சரோஜ் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட்டு 2024 ஜூன் முதல் மக்களவை உறுப்பினராக பதவி வகிக்கிறார். பிரியாவின் தந்தை அரசியல்வாதி துஃபானி சரோஜ்.
 
            
இந்த நிலையில், "இருவரும் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து, எங்களின் அனுமதியைக் கோரியுள்ளனர். நிச்சயதார்த்தம் இன்னும் நடைபெறவில்லை. இது தொடர்பாக ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன," என்று துஃபானி சரோஜ் தெரிவித்தார்.
ரிங்கு சிங் நடப்பு ஐபிஎல் சீசனில், 13 போட்டிகளில் 206 ரன்கள் குவித்து, 29.42 சராசரி மற்றும் 153.73 ஸ்ட்ரைக் ரேட்டைப் பதிவு செய்துள்ளார்.
அத்துடன், இந்திய அணிக்காக 33 டி20 போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டி20 வடிவத்தில் 42.00 சராசரியுடன் 546 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 27.50 சராசரியுடன் 55 ரன்களும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






