நீ என்ன குழந்தையா? இந்திய வீரரை தாக்கிய ரவி சாஸ்திரி.. இவரை அழைத்து வாங்க!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக மோசமான பந்துவீச்சு பார்க்கப்படுகிறது.
 
                                தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக மோசமான பந்துவீச்சு பார்க்கப்படுகிறது.
250 ரன்கள் தொடவே இந்தியா படாதபாடு பட்ட நிலையில் தென்னாப்பிரிக்கா அணி அபாரமாக விளையாடி 400 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி ஒரு முறைதான் பேட்டிங் செய்தது.
இதனால் ஆட்டம் மூன்று நாள் முடிவதற்குள்ளே இந்தியா தோல்வியை தழுவியது. பும்ரா, சிராஜ் ஆகியோர் நன்றாக பந்து வீசினாலும் அவர்களுக்கு துணையாக சர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா செயல்படவில்லை.
அவர்கள் இருவருமே அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா வீரர்கள் அபாரமாக விளையாடினர். இன்னும் சொல்லப்போனால் ஷர்துல் தாக்கூர் 19 ஓவர்களில் 101 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால் டீன் எல்காரின் விக்கெட்டை வீழ்த்தினார்.
கோலி, ரோகித் இல்லை.. சிறந்த டெஸ்ட் அணி.. ஹர்சா போக்லே தேர்வு
ஆனால் அதற்குள் அவர் 185 ரன்கள் அடித்து விட்டார். இது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சர்துல் தாகூர் கடுமையாக சாடி இருக்கிறார். இந்திய அணியில் பந்துவீச்சில் முறையான அனுபவம் இல்லாததையே காட்டுகிறது.
பும்ரா ,சிராஜ் என இரண்டு வீரர்கள் ஒரு அளவு சர்வதேச கிரிக்கெட் விளையாடிய அனுபவத்துடன் இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்டத்தில் முகமது சமியை இந்தியா மிகவும் மிஸ் செய்தது. சர்துல் தாக்கூர் ஒன்றும் குழந்தை கிடையாது.
அவர் இந்திய அணியின் நான்காவது வேகப்பந்துவீச்சாளர். ஆனால் அவர் அப்படி செயல்படவில்லை. தென்னாப்பிரிக்கா போன்ற ஆடுகளத்தில் நமக்கு முறையான மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் வேண்டும்.
இதன் மூலம் பெரிய தாக்கத்தை வெளிநாட்டு மண்ணில் நம்மால் ஏற்படுத்த முடியும். என்னை கேட்டால் ஆர்ஸ்தீப் சிங்கை தென் ஆப்பிரிக்கா டெஸ்டுக்கு கொண்டு வரலாம். ஆனால் அதற்கு முன்பு அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் எப்படி பந்து வீசுகிறார்.
எவ்வளவு நேரம் பந்து வீசுகிறார். ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறாரா என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் வெள்ளை நிற பந்திலே இவ்வளவு ஸ்விங் செய்யும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






