டிராவிட்டின் பதவி நீட்டிப்புக்கு பின்னால் இவ்வளவு இருக்கா? இனிதான் சம்பவமே இருக்கு!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இருந்த டிராவிட்டின் பதவிக்காலம் மற்றும் மற்ற நிர்வாகிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம் வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்படும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இருந்த டிராவிட்டின் பதவிக்காலம் மற்றும் மற்ற நிர்வாகிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம் வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
இது குறித்து பேசிய ராகுல் டிராவிட், சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கின்றோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் இந்திய அணியில் பயிற்சியாளராக நீடித்து வருகின்றேன்.
தடை விதிக்கப்பட்ட நிலையிலும் 52 சர்வதேச போட்டிகளில் விளையாடும் இலங்கை... திடீர்னு என்ன நடந்தது?
இந்த பயணம் நல்ல நினைவுகளை தருகிறது. ஒரு அணியாக நாங்கள் பல உச்சங்களையும் சரிவுகளையும் சந்தித்து இருக்கிறோம். ஒவ்வொரு வீரர்களும் எனக்கு நட்புணர்வுடனும் ஆதரவு தருவது சிறப்புமிக்கது.
எங்கள் அணியின் கலாச்சாரம் முறை ஒரே மாதிரி தான் இருக்கும். வெற்றியாக இருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும் சரி நாங்கள் சரியான நடைமுறைகளை பின்தொடர்ந்து போட்டிகளுக்காக தயாராகி வருகிறோம்.
அதுதான் போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இந்த நிலையில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பணியமர்த்தப்பட்டதற்கு கம்பீர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |