முன்னாள் டெல்லி அணி வீரருக்கு 8 ஆண்டுகள் சிறை விதிப்பு... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்த குற்றச்சாட்டின் பின்னர் நேபாள கிரிக்கெட் அமைப்பு அவரை நேபாள அணியின் கேப்டன் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்தது.
நேபாள நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சேன் முன்னாள் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடி வீரர் ஆவார்.
இந்த நிலையில், சந்தீப் லாமிச்சேன் 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பை அறிவித்தது.
அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், ரூ. 3,00,000 அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2,00,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம்.உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்த குற்றச்சாட்டின் பின்னர் நேபாள கிரிக்கெட் அமைப்பு அவரை நேபாள அணியின் கேப்டன் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்தது.
அவர் மீது வழக்கு நடந்த நிலையில், சில காலம் மட்டும் கிரிக்கெட் அணியில் இருந்து ஒதுக்கி வைத்த நேபாள கிரிக்கெட் அமைப்பு அவரை மீண்டும் போட்டிகளில் ஆட அனுமதித்தது.
தற்போது லாமிச்சேனின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறி இருக்கிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |