நாமல் ராஜபக்ஷ வழக்கு விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புகாரை ஜனவரி (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழுவுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது சட்டவிரோதமாக சம்பாதித்த ரூ. 15 மில்லியன் பணத்தை N. R. Consultancy என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அவர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புகாரை ஜனவரி (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று (07) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நாமல் ராஜபக்சவும் சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.