வரலாற்றில் முதல்முறை தரமான சம்பவம்.. சதம் அடித்து அசத்திய 10, 11ஆவது இந்திய பேட்டர்கள்!
ரஞ்சிக் கோப்பை காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், 10, 11ஆவது இட பேட்டர்கள் சதம் அடித்து, வரலாறு படைத்துள்ளனர்.
 
                                ரஞ்சிக் கோப்பை காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், 10, 11ஆவது இட பேட்டர்கள் சதம் அடித்து, வரலாறு படைத்துள்ளனர்.
ரஞ்சிக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் பரோடா ஆகிய அணிகள் மோதி வரும் நிலையில், 2ஆவது இன்னிங்ஸில் மும்பை 337/9 என இருந்த நிலையில், கடைசி இரண்டு பேட்டர்கள் சதம் அடித்ததால், ஸ்கோர் 569/10 என மாறியது.
10ஆவது இடத்தில் களமிறங்கிய கோட்டியன், 11ஆவது இட பேட்டர் துஷர் தேஷ்பண்டே இருவரும் சேர்ந்து, 232 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
மதிக்காத இந்த இரண்டு இந்திய வீரர்களுக்கு இனி வாய்ப்பே கொடுக்க மாட்டோம்... ரோஹித் அதிரடி
இது, முதல்தர டெஸ்ட் போட்டிகளிலேயே, 10ஆவது விக்கெட்டிற்கு சிறந்த இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் ஆகும்.
1991-92ஆம் ஆண்டில், டெல்லி பேட்டர்கள் அஜய் சர்மா, மனிந்தர் சிங் ஆகியோர் 10ஆவது விக்கெட்டிற்கு 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே பெரிய பார்ட்னர்ஷிப்பாக இருந்தது. தற்போது, ஒரு ரன்னில் இந்த மெகா சாதனையை தவறவிட்டுள்ளனர்.
 
கோட்டியன் 115 பந்துகளில் 10 பவுண்டரி 4 சிக்ஸர்கள் அடித்து சதம் கடந்து, 120 ரன்களுடன் நாட்அவுட் பேட்டராக இருந்தார். துஷர் தேஷ்பண்டே, 112 பந்துகளில் 10 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் சதம் அடித்து, 123 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
333/9 என இருந்த மும்பை அணியின் ஸ்கோரை தேஷ்பண்டே, கோட்டியன் இருவரும் சேர்ந்து, 569/10 என மாற்றினர். இதனால், பரோடா அணிக்கு 606 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்ய முடிந்தது. இதன்மூலம், மும்பை அணியின் வெற்றி, கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி வெற்றியைப் பெற்றால், அரையிறுதியில் தமிழ்நாடு அணியுடன் மும்பை மோதும். தமிழ்நாடு அணி, காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி இருந்தது.
முதல் அரையிறுதி ஆட்டம், மார்ச் 2ஆம் தேதி முதல், 6ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இரண்டாவது அரையிறுதி ஆட்டமும் அதே தேதியில் தான் நடைபெறும். 2ஆவது அரையிறுதிக்கு தமிழக அணி தேர்வாகிவிட்டது. பைனல், மார்ச் 10 முதல் 14ஆம் தேதிவரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






