ரோஹித் சர்மாவை வீட்டுக்கு அனுப்ப திட்டம்... மும்பை இந்தியன்ஸ் வைத்த ட்விஸ்ட்!

மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மாவை தக்க வைப்பது சுமையாக உள்ளது.

ரோஹித் சர்மாவை வீட்டுக்கு அனுப்ப திட்டம்... மும்பை இந்தியன்ஸ் வைத்த ட்விஸ்ட்!

ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி அண்மையில் நீக்கியதை அடுத்து சர்சை ஏற்பட்டு இருந்தது.  இந்த நிலையில் அது குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், ரோஹித் சர்மாவை மொத்தமாக அணியை விட்டே நீக்க மும்பை அணி திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்கான திட்டமிடலில் ஒரு பகுதி தான் இப்போது நடந்து உள்ளதாக கூறப்படுகின்றது.

ரோஹிதை நீக்க முன்னர் வேறு ஒரு கேப்டனை தயார் செய்து விட வேண்டும் என்ற முடிவோடு தான் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து இருக்கிறது. 

ஐபிஎல் அணிகள் ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தங்களின் அணியில் உள்ள வீரர்களில் நான்கு பேரை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். மற்ற வீரர்கள் அனைவரும் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள். 

அதன் பின் மெகா ஐபிஎல் ஏலம் நடைபெறுவதுடன், அதில் ஒவ்வொரு அணியும் வீரர்களை வாங்கி தங்கள் அணியை மீண்டும் புதிதாக தயார் செய்து கொள்ள வேண்டும். 

அப்போது வாங்கும் வீரர்கள் மற்றும் தக்க வைக்கப்பட்ட நான்கு வீரர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அணியில் இருப்பார்கள்.

அடுத்து 2025ஆம் ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ளதுடன், அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மாவை தக்க வைப்பது சுமையாக உள்ளது.

தற்போது 36 வயதாகும் ரோஹித் சர்மாவை இன்னும் ஓராண்டு கழித்து, அடுத்த மூன்று ஆண்டுகள் தக்க வைத்தால் 40 வயது வரை அவர் அணியில் இருப்பார். எனினும், 37 வயதுக்கு பின் முழு உடற்தகுதியுடன் விளையாட முடியுமா என்பது சந்தேகமே.

இந்த நிலையில், 30 வயதாகும் ஹர்திக் பாண்டியாவை தக்க வைத்தால் அது அணிக்கு நன்மை என மும்பை அணி கருதுவதுடன், இப்போது கேப்டனை மாற்றினாலும் முந்தைய கேப்டன் அணியில் இருந்து அவரை வழிநடத்த வேண்டும் எனவும் மும்பை அணி திட்டமிட்டு இருக்கிறது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்களாக இருந்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் விலகிய போதும் அவர்கள் அணியில் அடுத்து வந்த கேப்டனுடன் இணைந்து செயல்பட்டனர்.

எனவே, ரோஹித் சர்மா 2023 ஐபிஎல் தொடரில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து செயல்படுவார். அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்துக்கு முன் ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...