பந்துவீச விடாமல் தடுத்த ஹர்திக்... அதிருப்தியை வெளிப்படுத்திய வீரர்!

ஓய்வு அறையில் ஹர்திக்கிடம் அவ்வளவாக பேசுவது கிடையாது எனவும் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, மும்பை இந்தியன்ஸ் அணி 7 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ளது. 

பந்துவீச விடாமல் தடுத்த ஹர்திக்... அதிருப்தியை வெளிப்படுத்திய வீரர்!

ஐபிஎல் 17ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸுக்கு கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியாவுக்கு, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இன்றுவரை வாழ்த்துகளை தெரிவிக்கவில்லை. இதன்மூலம், ரோஹித் அதிருப்தியில் இருப்பது தெரிய வருகிறது.

அதுமட்டுமல்ல, களத்திலும் கூட இருவருக்கும் இடையில் சர்ச்சை தொடர்கிறது. ரோஹித் சர்மா எதாவது ஆலோசனை கூற வந்தால், அதனை ஹர்திக் பாண்டியா புறக்கணித்த சம்பவமும் நடைபெற்றது.

ரோஹித் சர்மாவின் ஆதரவு வீரர்கள் எனக் கருதப்படும் பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஆகாஷ் மத்வால் போன்றவர்களும் ஹர்திக் பாண்டியாவுடன் இணக்கமாக இருப்பது கிடையாது. 

ஓய்வு அறையில் ஹர்திக்கிடம் அவ்வளவாக பேசுவது கிடையாது எனவும் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, மும்பை இந்தியன்ஸ் அணி 7 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ளது. 

இதில், டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக மட்டுமே மும்பை வென்றுள்ளது. குறிப்பாக, பஞ்சாப் கிங்ஸிடம் போராடி வென்ற இப்போட்டியில்தான், ஒரு சம்பவம் நடைபெற்றது.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி பௌலர் முகமது நபியை ஹர்திக் பாண்டியா பயன்படுத்தவில்லை. 

ஷ்ரேயஸ் கோபால் 2 ஓவர்களில் 26 ரன்களை விட்டுக்கொடுத்தபோதும், வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தபோதும் முகமது நபியை பயன்படுத்தவில்லை.

நடப்பு ஐபிஎல் தொடரில், அபாரமாக பந்துவீசி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி ஸ்பின்னர் முகமது நபி, முக்கியமான நேரத்தில் சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுக்க கூடியவர். அப்படியிருந்தும், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக பந்துவீச வைக்கப்படவில்லை.

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டி முடிந்தப் பிறகு, முகமது நபி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'ஹர்திக் ஏன் முகமது நபிக்கு ஓவர் கொடுக்கவில்லை. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி விசித்திரமாக இருக்கிறது' என ஒருவர் பதிவிட்டதை, சேர் செய்துள்ளார்.

இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், நபி அதனை உடனே நீக்கினார். ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக முகமது நபி இருப்பதால்தான், அவருக்கு சரியான வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லையோ என ரோஹித் சர்மா ரசிகள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...