சென்னை அணிக்கு திரும்பி வந்த இலங்கை வீரர்கள்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
சில நாட்கள் முன்பு அவர்கள் இருவரும் விசா பெறுவதற்காக இலங்கைக்கு சென்ற நிலையில், அவர்கள் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைய உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கடந்த சில நாட்களாக விலகி இருந்த மதிஷ பதிரன மற்றும் தீக்ஷன ஆகிய இருவரும் மீண்டும் அணியில் இணைய உள்ளனர்.
சில நாட்கள் முன்பு அவர்கள் இருவரும் விசா பெறுவதற்காக இலங்கைக்கு சென்ற நிலையில், அவர்கள் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைய உள்ளனர்.
மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு உறுதியாக செல்ல முடியும் என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.
இந்த நிலையில் பதிரன இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வெறும் ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடி 13 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். பதிரான இல்லாததால் சிஎஸ்கே அணி தடுமாறும் நிலை காணப்பட்டது.
ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரகுமான் விலகி உள்ளதுடன், தீபக் சாஹர் காயத்தில் சிக்கி தொடரில் இருந்தே விலகும் நிலையில் உள்ளார்.
துஷார் தேஷ்பாண்டே காய்ச்சல் காரணமாக போட்டிகளில் ஆட முடியாத நிலையில் இருக்கிறார். இலங்கைக்கு சென்று இருந்தால் பதிரான இல்லாத நிலையில் கடந்த போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.
அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் 162 ரன்கள் இலக்கினை பஞ்சாப் கிங்ஸ் மிக எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றது. பதிரன இருந்திருந்தால் கடைசி ஓவர் வரை சிஎஸ்கே அணியால் அழுத்தம் கொடுத்திருக்க முடியும்.
இப்போது பதிரன அணிக்கு திரும்பி இருப்பதால் அடுத்த நான்கு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகின்றது.
சிஎஸ்கே அணி அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளதுடன், பதிரன பங்கேற்பார் என கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |