இந்திய டி20 அணி கேப்டன் பதவியால் ஜெய் ஷாவுக்கு ஆப்பு... பூதாகரமாகும் பிரச்சினை!
இந்திய டி20 அணிக்கு கேப்டனாக யாரை நியமிப்பது என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 தொடர் முடிந்த உடனே, இந்திய டி20 அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய டி20 அணிக்கு கேப்டனாக யாரை நியமிப்பது என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.
ஹர்திக் பாண்டியா, ஜஸ்பரீத் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ரேசில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்திய டி20 அணியின் புதுக் கேப்டனை ரோஹித் சர்மா அறிவித்தால், அவர் பெரிய சர்ச்சையில் சிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெய் ஷா, ராஜ்கோட்டில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டப் பிறகு, அரங்கைவிட்டு வெளியே வரும்போதுதான், ‘‘டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், ரோஹித் சர்மாதான் கேப்டனாக செயல்படுவார்’’ என அறிவித்தார்.
ராஜ்கோட்டில், ஜெய் ஷா அந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அந்த நிகழ்ச்சியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை சந்தித்துப் பேசிய பிறகுதான், ஜெய் ஷா, ரோஹித்தை கேப்டனாக அறிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ரோஹித் சர்மா கோப்பை வென்றுகொடுத்துவிட்டு, ஓய்வை அறிவித்துவிட்டார். அதன்பிறகும், மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டனைதான், அதாவது ஹர்திக் பாண்டியாவைதான், இந்திய டி20 அணிக் கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது.
இல்லையென்றால், அதே மும்பை இந்தியன்ஸை சேர்ந்த பும்ரா, சூர்யகுமாருக்குதான் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே, பாஜக மற்றும் அம்பானியை தொடர்புபடுத்தி எதிர்கட்சிகள் விமர்சித்து வருகிறது.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு தடை? அதை செய்யாவிட்டால் விளையாட முடியாதாம்!
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸை சேர்ந்தவர்களுக்கே, மீண்டும் மீண்டும் இந்திய அணிக் கேப்டன் பதவியை கொடுத்து வருவதால், இதில் ஊழல் கூட நடந்திருக்கலாம் என எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் பேச துவங்கி உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸை சேர்ந்தவர்களுக்கே, இந்திய அணிக் கேப்டன் பதவியை கொடுப்பதற்காக, திட்டமிட்டே ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுலை புறக்கணித்து வருவதாகவும் பலர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால், இனி வரும் நாட்களில் இந்த பிரச்சினை பூதாகரமாக மாறவும் வாய்ப்புள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |