பும்ராவின் ரகசிய டாஸ்க்.. செய்து முடித்த 2 வீரர்கள்... தென்னாப்பிரிக்கா சரிந்ததின் பின்னணி... வெளியான தகவல்!
அதன்படி முதல் இன்னிங்க்ஸில் முகமது சிராஜ் 6 விக்கெட்கள் வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற பும்ரா எந்த அளவுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மைதானத்தின் பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பது இரு அணிகளுக்கும் தெரிந்த நிலையில், பும்ரா உள்ளிட்ட இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் தங்களை தயார்படுத்தி இருந்தனர்.
ஆனால், தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த முதல் ஓவரை பும்ரா வீசிய போதே தன் அனுபவத்தின் மூலம் பிட்ச்சின் தன்மை குறித்து அறிந்து கொண்டார்.
அதை அடுத்த ஓவர் வீசிய முகமது சிராஜ்-இடம் கூறி, பந்தை எங்கு பிட்ச் செய்ய வேண்டும், எந்த லைனில் வீச வேண்டும் என யோசனைகளை கூறி இருக்கிறார்.
மேலும், இரண்டு பக்கமும் பந்து வீச வேண்டிய நிலையில் பும்ரா வீசிய பக்கம் பந்து அதிகம் பவுன்ஸ் ஆகவில்லை. ஆனால், மறுபுறம் பந்து அதிகமாக பவுன்ஸ் ஆனது.
பும்ரா விக்கெட் எடுக்காவிட்டாலும் ரன் கொடுக்காமல் அழுத்தம் கொடுத்தால் மறுமுனையில் சிராஜ் விக்கெட்களை வீழ்த்துவார் என திட்டமிட்டு செயல்பட்டார்.
அதன்படி முதல் இன்னிங்க்ஸில் முகமது சிராஜ் 6 விக்கெட்கள் வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். முகேஷ் குமாரும் பும்ரா யோசனைகளை செயல்படுத்தினார்.
முதல் இன்னிங்க்ஸில் அவர் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். தென்னாப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அடுத்து தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் பேட்டிங்கின் போது முகேஷ் குமார் பவுன்ஸ் ஆகும் முனையில் இருந்து பந்து வீசி 2 விக்கெட்களை எடுத்தார்.
ஆனால், சிராஜ் இந்த முறை இரண்டு பக்கம் இருந்தும் பந்து வீசியும் அவரால் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. எனவே, பும்ரா பவுன்ஸ் ஆகும் திசையில் இருந்து பந்து வீசி 6 விக்கெட்களை அள்ளினார்.
தென்னாப்பிரிக்கா 176 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய அணிக்கு 79 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதால் இந்தியா எளிதாக வென்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |