டிரம்பின் நெருங்கிய துணை போல்சனாரோவுக்கு 27 ஆண்டு சிறைத் தண்டனை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் நெருங்கிய கூட்டாளி மற்றும் பிரேசிலின் முன்னாள் அதிபரான ஜெய்ர் போல்சனாரோவுக்கு, தனது தேர்தல் தோல்வியை ஏற்காமல் கலகத்தைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் 27 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் நெருங்கிய கூட்டாளி மற்றும் பிரேசிலின் முன்னாள் அதிபரான ஜெய்ர் போல்சனாரோவுக்கு, தனது தேர்தல் தோல்வியை ஏற்காமல் கலகத்தைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் 27 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு பிரேசில் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, ஆட்சியை மாற்ற முயன்றதாக போல்சனாரோ மீது விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டர் டி மோரேஸ் அறிவித்தார். போல்சனாரோ கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வீட்டுக்காவலில் இருந்த நிலையில், கண்காணிப்பு கருவியை சேதப்படுத்த முயன்றதாகக் கூறப்பட்டு கடந்த வாரம் போலீசால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றம் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை மிக தீவிரமாகக் கருதியதால், அவரை தனி வசதிகளுடன் கூடிய 12 சதுர மீட்டர் அறையில் தனிமைப்படுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. அவருக்கு வெளிப்புறத்துடன் தொடர்பு வராது என்ற நிலையும் விதிக்கப்பட்டுள்ளது.
போல்சனாரோ தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தாலும், மேற்கண்ட வழக்கில் அனைத்து மேல்முறையீடுகளும் அவருக்கு சாதகமாக அமையவில்லை. உடல்நிலை காரணமாக வீட்டுக்காவலை நீட்டிக்க வேண்டும் என்ற அவரது தரப்பின் கோரிக்கையும் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.
தற்போது 70 வயதான போல்சனாரோ முழு தண்டனையையும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர் மீண்டும் வெளிவருவது மிகுந்த சிக்கலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அவரது நெருங்கிய நண்பரான டிரம்ப், இந்த நடவடிக்கையை அரசியல் நோக்கத்துடன் மேற்கொண்டதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்.
