கோலி, ரோஹித்தை தொடர்ந்து மற்றுமொரு சீனியர் வீரரருக்கும் இனி இடமில்லை: பிசிசிஐ அதிரடி முடிவு!

இஷான் கிஷன் இதுவரை 32 டி20 போட்டிகளில் விளையாடி, 25.68 சாரசரி, 124.38 ஸ்ட்ரைக் ரேட்டில் 796 ரன்களை அடித்துள்ளார்.

Dec 11, 2023 - 13:02
Dec 11, 2023 - 13:04
கோலி, ரோஹித்தை தொடர்ந்து மற்றுமொரு சீனியர் வீரரருக்கும் இனி இடமில்லை: பிசிசிஐ அதிரடி முடிவு!

கோலி, ரோஹித்தை தொடர்ந்து இனி டி20 கிரிக்கெட்டில் கே.எல்.ராகுலை சேர்க்க வேண்டாம் என பிசிசிஐ தேர்வுக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 அணியில் கே.எல்.ராகுலுக்கு மாற்றான விக்கெட் கீப்பர் என்றால் அது இஷான் கிஷன்தான். மேலும், இஷான் கிஷனுடன் சேர்த்து ஜிதேஷ் ஷர்மாவுக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. 

ஜிதேஷ் ஷர்மா ஐபிஎலில் அதிரடி காட்டியதால்தான் இடம் கிடைக்கிறது. ரிஷப் பந்த் வந்தப் பிறகு ஜிதேஷ் நிலைமை மோசமாகலாம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில், ரிஷப் பந்த் வரும்வரை இஷான் கிஷனுக்கு தொடர்ந்து விக்கெட் கீப்பர் இடத்தை கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதேபோல், கே.எல்.ராகுலுக்கு இனி இடம் கொடுக்க கூடாது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில், மெய்ண் விக்கெட் கீப்பராக இஷான் கிஷனும், பேக்கப் கீப்பராக ஜிதேஷ் ஷர்மாவும் செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதையும் படிங்க: உலகக் கோப்பையில் நடந்த ஒரே ஒரு நல்ல விஷயம் இதுதான்... கெளதம் கம்பீர் அதிரடி

கே.எல்.ராகுல் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகிறார். இதனால், ராகுலை தொடர்ந்து ஒருநாள் அணியில் விளையாட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ராகுலுக்கு கேப்டன் பதவியை கொடுக்கவும் வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இஷான் கிஷன் இதுவரை 32 டி20 போட்டிகளில் விளையாடி, 25.68 சாரசரி, 124.38 ஸ்ட்ரைக் ரேட்டில் 796 ரன்களை அடித்துள்ளார். ஐபிஎலில் 91 போட்டிகளில் 29.42 சராசரியுடன் 2324 ரன்களை சேர்த்துள்ளார். 

ஸ்ட்ரைக் ரேட் 134.26ஆக உள்ளது. டி20 கிரிக்கெட்டில் கே.எல்.ராகுலின் சராசரி 37.75ஆக உள்ளது. 72 போட்டிகளில் 2265 ரன்களை அடித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 139.13ஆக உள்ளது. 118 டி20 போட்டிகளில் 46.78 சராசரி, 134.42 ஸ்ட்ரைக் ரேட்டில் 4163 ரன்களை சேர்த்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!