அணியில் இடம் கிடையாது.. 8 நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு மறுத்த கம்பீர்.. என்ன நடக்கிறது?

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வரும் நிலையில், இந்த முறை அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. 

அணியில் இடம் கிடையாது.. 8 நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு மறுத்த கம்பீர்.. என்ன நடக்கிறது?

2025 ஆசிய கோப்பை தொடருக்காக சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில், 2025 ஐபிஎல் தொடரில் சாதித்த பல முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது,விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வரும் நிலையில், இந்த முறை அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. 

2025 ஐபிஎல் தொடரின் ஆரஞ்சு கேப் மற்றும் பர்ப்பிள் கேப் வென்ற வீரர்கள் கூட அணியில் தேர்வு செய்யப்படாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

2025 ஐபிஎல் தொடரின் ஆரஞ்சு கேப் வென்றவர் தமிழக வீரரான சாய் சுதர்சன். 15 போட்டிகளில் விளையாடிய அவர், 759 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

ஆனாலும், ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இது தமிழக ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கடந்த 2024 டி20 உலகக் கோப்பை அணியில் கூட இடம்பெறாத ஸ்ரேயாஸ் ஐயர், 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக அபாரமாக செயல்பட்டார். 17 போட்டிகளில் 604 ரன்கள் குவித்த அவர், தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.

இருந்தபோதிலும், இந்திய அணியில் அவருக்கான இடம் மீண்டும் ஒருமுறை மறுக்கப்பட்டுள்ளது. அணியின் சரியான கலவையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.

கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் மாற்று தொடக்க வீரராக இருந்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். 2025 ஐபிஎல் தொடரிலும் 559 ரன்கள் விளாசினார். இருப்பினும், அவருக்கு ஆசிய கோப்பைக்கான இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அபிஷேக் சர்மாவின் ஆல்-ரவுண்டர் திறமையால் (பேட்டிங் மற்றும் பந்துவீச்சு) ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார். இருப்பினும், ஜெய்ஸ்வால் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது சிராஜ், 2025 ஐபிஎல் தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால், அவருக்கு ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக பணிச்சுமையுடன் பந்துவீசியதால், வரவிருக்கும் தொடர்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

2025 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி பர்பிள் கேப் வென்ற பிரசித் கிருஷ்ணா. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 15 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். ஆனாலும், இவருக்கும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. இவர் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணியின் அனுபவ வீரரான கே.எல். ராகுல், 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவரது மெதுவான பேட்டிங் அணுகுமுறை என்ற காரணத்தை வைத்து டி20 அணியில் மீண்டும் இடம்பிடிக்கத் தவறிவிட்டார்.

2025 ஐபிஎல் தொடரில் கே எல் ராகுல் பல போட்டிகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து இருந்தார். ஆனாலும், சஞ்சு சாம்சன் மற்றும் ஜித்தேஷ் சர்மா போன்ற அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு தேர்வுக்குழு முன்னுரிமை அளித்துள்ளது.

சாய் சுதர்சனைப் போலவே, 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய தமிழக வீரர் சாய் கிஷோருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆல்-ரவுண்டராக ஜொலித்த க்ருனால் பாண்டியாவும் அணியில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

ஒட்டுமொத்தமாக, ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பல வீரர்களுக்கு ஆசிய கோப்பையில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது, புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.