டெல்லி அணியால் காப்பாற்றப்பட்ட சிஎஸ்கே அணி... சரியான நேரத்தில் நடந்த சம்பவம்!

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் 26 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

டெல்லி அணியால் காப்பாற்றப்பட்ட சிஎஸ்கே அணி... சரியான நேரத்தில் நடந்த சம்பவம்!

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் 26 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

26வது லீக் போட்டியில் டெல்லி அணி தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்ததன் மூலம் கடைசி இடத்தில் இருந்த டெல்லி அணி தற்போது முன்னேறியுள்ளது.

டெல்லி அணி லக்னோவை வீழ்த்தியிருப்பது, சிஎஸ்கே அணிக்கு சாதகமாகியுள்ளது. புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் சிஎஸ்கேவும், மூன்றாம் இடத்தில் லக்னோ அணியும் இருந்தன. 

தற்போது டெல்லிக்கு எதிராக லக்னோ அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் லக்னோ அணியின் ரன் ரேட் 0.43 என்ற அளவில் சரிந்து இருக்கிறது.

இதனால் நான்காவது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி தற்போது 6 புள்ளிகள் உடன் ரன் ரேட் 0.66 என்ற நிலையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

ராஜஸ்தான அணி 5 போட்டி விளையாடி 8 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் கே கே ஆர் அணி நான்கு போட்டிகளில் விளையாடி ஆறு புள்ளிகளுடன் இரண்டவது இடத்திலும் உள்ளது.

லக்னோ நான்காவது இடத்திலும் சன்ரைசர்ஸ் அணி 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. ஆறாவது இடத்தில் குஜராத் அணி  6 புள்ளிகளுடன் உள்ளது. ஏழாவது இடத்தில் உள்ள மும்பை அணி நான்கு புள்ளிகள் உடன் உள்ளது.

எட்டாவது இடத்தில் பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் இருப்பதுடன், டெல்லி அணி இரண்டாவது வெற்றியை பெற்று ஒன்பதாவது இடத்திலும், ஆர்சிபி அணி இரண்டு புள்ளிகள் உடன் பத்தாவது இடத்திலும் இருக்கிறது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...