மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றம்... முக்கிய வீரர் வெளியே... 2 புதிய வீரர்கள் உள்ளே?

தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய அணியானது  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேஎல்.ராகுல் தலைமையில் விளையாடுகிறது.

மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றம்... முக்கிய வீரர் வெளியே... 2 புதிய வீரர்கள் உள்ளே?

தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய அணியானது  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேஎல்.ராகுல் தலைமையில் விளையாடுகிறது.

முதல் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்து உள்ளது.

இந்த நிலையில், நாளைய தினம் நடக்கவுள்ள இறுதி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  வெல்லும் அணியை தொடரை வெல்லும். ஏற்கெனவே டி20 தொடர் சமனில் முடிந்தது.

கடந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற, திலக் வர்மா மூன்றாவது இடத்திற்கு கொண்டுவரப்பட்டு, ரிங்கு சிங் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் திலக் மற்றும் ரிங்கு இருவரும் பேட்டிங்கில் பெரியளவில் பிரகாசிக்கவில்லை.

முதல் இடத்தை இழந்த இரண்டு இந்திய வீரர்கள்.. பிசிசிஐ-ஆல் வந்த வினை.. என்ன நடந்தது?

அத்துடன், முதல் போட்டியில் பேட்டிங் செய்ய பெரிய வாய்ப்பு கிடைக்காத திலக் வர்மாவுக்கு கடந்த போட்டியில் மட்டுமே முழுமையாக வாய்ப்பு கிடைத்தது. எனவே ஒரு போட்டியை வைத்து நீக்க முடியாது. மேலும் ரிங்கு சிங்கும் ஒரு போட்டியில்தான் விளையாடியிருக்கிறார். இதே நிலைதான் சஞ்சு சாம்சனுக்கும் காணப்படுகின்றது.

துவக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் மற்றும் சாய் சுதர்சன் இருவரில் சாய் சுதர்சன் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டாலும், ருத்ராஜ் இரண்டு ஆட்டத்திலும் சரியாக விளையாடவில்லை.

தற்போதைய நிலையை வைத்து பார்க்கும் பொழுது இரண்டாவது போட்டியில் களம் இறங்கிய அதே இந்திய அணி தான் மூன்றாவது போட்டியிலும் களம் இறங்கும் என்று தெரிகிறது. ரஜத் பட்டிதார் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோருக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...