இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதுமா? வாய்ப்பிருக்கா... சாத்தியமாகுமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சைக்கிளிலும் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகின்றது.

இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதுமா? வாய்ப்பிருக்கா... சாத்தியமாகுமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சைக்கிளிலும் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகின்றது.

முதல் பைனலில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவிய இந்தியா, இரண்டாவது பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

இந்த நிலையில், தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியா, வரும் நாட்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட், நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் என்பன இந்திய மண்ணில் நடைபெறுகிறது. 

இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பைனலுக்கு தகுதி பெற்று விடும்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக ஐசிசி தொடரை தவிர வேறு எந்த போட்டிகளிலும் விளையாடாத பாகிஸ்தான் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தொடருக்கு தகுதி பெற முடியுமா என்பதை பார்க்கலாம். 

தற்போது தொடர்ந்து நான்கு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள பாகிஸ்தான் அணி, அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளை சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.

அத்துடன், தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடுகிறது. பின்னர்சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொள்ளவுள்ளது.

தற்போது 36.6 புள்ளி வெற்றி சதவீதத்துடன் ஆறாவது இடத்தில் உள்ளது பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு செல்ல இன்னும் 9 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும். 

அப்படி செய்தால், 77.38 வெற்றி சதவீதத்துடன் பாகிஸ்தான் அணி பைனலுக்கு செல்லும். ஆனால் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரும் பாகிஸ்தானுக்கு மிகவும் சவாலாக இருக்கும். 

அத்துடன், ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினாலும் அது பாகிஸ்தானுக்கு நன்மையை தரும். இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 2007 ஆம் ஆண்டு தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர்.

இதனால் இருவரும் இறுதிப் போட்டிக்கு சென்றால் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் மோதும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...