குக்கிராமத்தில் பிறந்த வீரரின் வீட்டின் முன் குவிந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள்.. மிரள வைத்த இந்திய வீரர்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீட்டுக்கு முன்னதாக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீட்டுக்கு முன்னதாக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சளர் முகமது ஷமி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார். தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், தனது பந்துவீச்சு மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இந்த நிலையில், தனது சொந்த ஊரான சஹஸ்புருக்கு ஷமி வந்துள்ள விடயம் அவரது ரசிகர்களுக்கு தெரியவர ஷமி வீட்டுக்கு முன்னதாக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்த வீடியேவை ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்நத நிலையில் வீடியோ வைரலாகியுள்ளது.
இன்று கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்புக்கு சொந்தக்காரரான ஷமி சிறுவயதில் பேருந்து, டிராக்டர், லொறி ஓட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'கடந்த காலங்களில் பைக், கார்கள், டிராக்டர்கள், பேருந்து மற்றும் லொறிகள் ஆகியவற்றை ஓட்டியிருக்கிறேன். பயணம் செய்வது மற்றும் மீன் பிடிப்பது எனக்கு பிடிக்கும். வாகனங்கள் நிறைய ஓட்டுவேன்.
பைக் மற்றும் கார்கள் ஓட்டுவது பிடிக்கும். நெடுஞ்சாலையில் பைக் ஓட்டுவேன். இந்தியாவுக்கு விளையாட தொடங்கிய பின்னர் பைக் ஓட்டுவது குறைந்து, பின்னர் அதனை நிறுத்தி விட்டேன். சில சமயங்களில் என்னுடைய தாயாரை சந்திக்க கிராமத்திற்கு செல்வேன். என்னுடைய பள்ளி நண்பர்களில் ஒருவரின் வீட்டில் லொறி இருந்தது. அதனை ஓட்டுபடி என்னிடம் கூறும்போது, நான் சிறுவனாக இருந்தேன், அதனை ஓட்டினேன். அதன் பின் ஒருமுறை எங்களுடைய டிராக்டரை ஓட்டி சென்று குளத்தில் விட்டேன். இதுபற்றி அறிந்த என்னுடைய தந்தை திட்டிவிட்டார்' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |