இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார்.

Jan 26, 2024 - 02:34
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்திய திரையுலகில் இசை ஜாம்பவானாக இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி (47) தமிழ் திரையுலகில் பிரபல பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்தார்.

இந்த நிலையில் சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி அதற்கான  சிகிச்சையை இலங்கையில் இருந்தபடி எடுத்து வந்தார். 


தற்போது, சிகிச்சை பலனின்றி பவதாரிணி இலங்கையில் உயிரிழந்துள்ளார். அவரின் உடல் நாளை இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த பவதாரிணிக்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இருவருமே பிரபலமான இசையமைப்பாளர்கள் ஆவர்.

பவதாரிணியின் கணவர் பெயர் சபரிராஜ் ஆகும். பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடியதற்காக கடந்த 2000ஆம் ஆண்டு தேசிய விருதை வென்றுள்ளார் பவதாரிணி. 

பவதாரிணி உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!