இங்கிலாந்து அணியின் சோகமான சாதனை.. 11 நாடுகளிடம் தோற்ற ஒரே அணி இதுதான்!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகப்பெரிய ஏமாற்றமாக ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவி உலக கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஒரு மோசமான சாதனையை படைத்திருக்கிறது.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகப்பெரிய ஏமாற்றமாக ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவி உலக கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஒரு மோசமான சாதனையை படைத்திருக்கிறது.
அதாவது 11 டெஸ்ட் நாடுகளிடம் ஒருநாள் கிரிக்கெட்டில் தோல்வியை தழுவிய ஒரே அணி என்ற சோகமான பெருமையை இங்கிலாந்து படைத்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து அணி முதல்முறையாக 1971 ஆம் ஆண்டு தோல்வியை தழுவியது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 1973 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி முதல் முறையாக தோற்றது.
பாகிஸ்தானிடம் முதல் முறையாக இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 1974 ஆம் ஆண்டு தோல்வியை தழுவியது.
இதைப் போன்று இந்தியாவிடம் இங்கிலாந்து அணி 1981 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் முதல் முறையாக தோற்றது.
அப்போது கத்துக்குட்டி அணியாக இருந்த இலங்கையிடம் இங்கிலாந்து அணி முதல்முறையாக 1982 ஆம் ஆண்டு தோல்வியில் தழுவியது.
இதேபோன்று நியூசிலாந்து அணியிடம் 1983 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் தோல்வியை தழுவியது.
இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயிடம் 1992 ஆம் ஆண்டு தோற்ற இங்கிலாந்து அணி அதன் பிறகு 1996 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிடம் முதல் முறையாக ஒரு நாள் கிரிக்கெட்டில் தோற்றது.
அதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு வங்கதேசத்திடம் இங்கிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோற்றது.
இதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அயர்லாந்திடம் இங்கிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் தோற்றது.
அதன் பிறகு தற்போது 2023 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிடம் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் முதல்முறையாக தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |