ரோகித், கோலி தேவையில்லை... 2007 போல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு? பிசிசிஐ அதிரடி!
விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் 2024 டி20 உலக கோப்பையில் கடைசியாக வாய்ப்பு தரப்படும் என்று கூறப்பட்டது.
டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி மே மாதம் முதலாம் தேதி அறிவிக்கப்படவுள்ளதுடன், ஐபிஎல் தொடரில் திறமையை காட்டும் வீரர்களுக்கு அணியில் இடமளிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
ரோகித் சர்மா தான் கேப்டனாக இருப்பார் என்று ஏற்கெனவே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்த நிலையில் டி20 உலக கோப்பையில் ஒரு பெரிய மாறமற் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் பலமுறை டி20 உலக கோப்பையில் விளையாடியும் அரை இறுதியை தாண்ட முடியவில்லை.
இந்த நிலையில், விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் 2024 டி20 உலக கோப்பையில் கடைசியாக வாய்ப்பு தரப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், தற்போது 2007 ஆம் ஆண்டு எப்படி எந்த ஒரு ஸ்டார் வீரரும் இல்லாமல் இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ அனுப்பியதோ அதேபோல் இம்முறை செயற்படுத்தலாமா என்ற ஆலோசனை நடத்தி வருகிறது.
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஐபிஎல் தொடர்களும் பெரிய அளவில் அவர்கள் சாதிக்கவில்லை. இருவரும் ரன்கள் அடித்தாலும் ஸ்ட்ரைக் ரேட் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால், பல இளம் வீரர்கள் குறிப்பாக யார் என்றே தெரியாத ஆஸ்டோஷ் சர்மா, ஷசாங் சிங் போன்ற வீரர்கள் எல்லாம் தனி ஆளாக நின்று போட்டியை மாற்றி வருகிறார்கள்.
இதனால் இம்முறை இளவீரர்கள் கொண்ட அணியை அனுப்பலாமா என்ற யோசனையில் தேர்வு குழு இருப்பதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ஜெய்ஸ்வால், கில் சூரியகுமார் யாதவ், ஆஷ்டோஷ் சர்மா,ஷாஸாங் சிங், ரியான்பராக் சஞ்சு சாம்சன், ஆவேஸ் கான், மாயிங் யாதவ் போன்ற வீரர்களை தேர்வு செய்து அனுப்பலாமா என்ற யோசனை செய்ப்பட்டு வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |