இந்தியாவில் விரைவில் 3 கிரிக்கெட் அணிகள்: கம்பீர், அகார்கர் மாஸ்டர் பிளான்!
உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணி மிகப்பெரிய பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறதுடன், யாராலும் தொட முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
 
                                உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணி மிகப்பெரிய பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறதுடன், யாராலும் தொட முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
மற்ற நாடுகள் எல்லாம் அணிக்கு வீரர்களை தேர்வு செய்யவே திக்கு முக்காடும் நிலையில், இந்திய அணியில் ஒரு இடத்திற்கு மூன்று நான்கு பேர் போட்டி போடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
உதாரணமாக, தொடக்க வீரராக விளையாட, ரோகித் சர்மா, கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ், இசான் கிஷன், அபிஷேக் ஷர்மா, கேஎல் ராகுல் போன்ற பல வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாமல் போவதால், டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கு என தனித்தனியாக மூன்று அணிகளை அறிமுகப்படுத்த போவதாக பயிற்சியாளராக ஆவதற்கு முன்பு கம்பீர் அறிவித்தார்.
 
எனினும் பதவிக்கு வந்த பிறகு இது தொடர்பில் பின்வாங்க தொடங்கிய கம்பீரிடம் இந்திய கிரிக்கெட்டில் மூன்று அணியை தேர்வு செய்யும் முறை எப்போது வரும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த கம்பீர் நிச்சயமாக எதிர்காலத்தில் இது சாத்தியமாகும் என்னும், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டவர்கள் தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட் இல் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், ஒரே அடியாக மூன்று அணியை தேர்வு செய்ய இயலாது என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய தேர்வு குழு தலைவர் அகார்கர், தற்போது மூன்று அணிகள் தேர்வு செய்வது குறித்து நாங்கள் எந்த ஒரு திட்டத்தையும் வைத்திருக்கவில்லை. அணிக்கு சரியான வீரர்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும். மூன்று கிரிக்கெட் வடிவங்களுக்கும் இந்த ஃபார்முலாவை வைத்து தான் நாங்கள் வீரர்களை தேர்வு செய்கின்றோம் என்று கூறினார்.
இதனால், மூன்று அணியை உருவாக்கும் முயற்சி விரைவில் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






