ரோஹித் சர்மா நீக்கம்.. கோலியும் இல்லை... புதிய கேப்டனை தெரிவு செய்த கம்பீர்... உண்மை என்ன?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான  மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. 

Aug 7, 2024 - 11:33
ரோஹித் சர்மா நீக்கம்.. கோலியும் இல்லை... புதிய கேப்டனை தெரிவு செய்த கம்பீர்... உண்மை என்ன?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான  மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. 

இந்த போட்டியில், கேப்டன் ரோஹித் சர்மா நீக்கப்படுவார் எனவும், அவருக்கு பதிலாக புதிய கேப்டனை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோலிக்கு முதுகு வலி இருப்பதால் அவரும் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகின்றது.

முன்னதாக, இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அபாரமாக பேட்டிங் செய்து  44 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். 

அவர் பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது அவருக்கு வலது தொடையில் அவருக்கு வலி ஏற்பட்டதுடன், அப்போது பிசியோதெரபிஸ்ட் அவருக்கு சில மருத்துவ உதவிகளை அளித்தார். அதன் பின்னர் ரோஹித் சர்மா முழுமையாக பேட்டிங் செய்தார்.

இந்த நிலையில், அவர் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன் வலை பயிற்சியில் ஈடுபடவில்லை எனவும், அதனால் அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் எனவும் தகவல் வெளியாகி வருகின்றது.

மேலும், ரோஹித் சர்மா ஆடாவிட்டால், அவருக்கு பதிலாக சுப்மன் கில் அல்லது கே எல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவரை கவுதம் கம்பீர் கேப்டனாக நியமிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. 

அதே போல, விராட் கோலிக்கும் முதுகில் லேசான வலி இருப்பதால் அவரும் விளையாட மாட்டார் எனவும் கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவல்களில் எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.

இந்திய அணியின் தகவல்களின்படி, விராட் கோலி வலைப் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ரோஹித் சர்மாவுக்கு வலது தொடையில் வலி இருந்தது உண்மைதான் எப்தால், அதனால் அவர் பயிற்சியில் அதிகமாக ஈடுபடவில்லை. அதே சமயம், அவர் வலைப்பயிற்சியின் போது மற்ற வீரர்களுக்கு ஆலோசனைகள் அளித்து வந்தார்.

அவர் மிகவும் ஈடுபாட்டுடன் ஒவ்வொரு வீரருடனும் பேசினார். அவர் கேப்டனாக இருக்கப் போவதில்லை என்றால் அவர் விலகியே இருந்திருப்பார். அதை வைத்துப் பார்க்கும்போது அவர் நிச்சயம் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என தெரிகிறது.

ரோஹித் சர்மா இதற்கு முந்தைய காலங்களில் இது போல காயம் ஏற்பட்டால் வலைப் பயிற்சியில் ஈடுபடுவதை தவிர்த்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!