சிவம் துபேவுக்கு ரிங்கு சிங் வைத்த ஆப்பு... ரசிகர்கள் அதிர்ச்சி... என்ன நடந்தது?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் ரிங்கு சிங்புவால்  சிவம் துபே ரன் அவுட் ஆனதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

சிவம் துபேவுக்கு ரிங்கு சிங் வைத்த ஆப்பு... ரசிகர்கள் அதிர்ச்சி... என்ன நடந்தது?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் ரிங்கு சிங்புவால்  சிவம் துபே ரன் அவுட் ஆனதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனையடுத்து, சிவம் துபே, ரிங்கு சிங் மீது கடுமையாக கோபம் கொண்டதுடன், களத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.

முதலில் ஆடிய ஜெய்ஸ்வால் 12, சுப்மன் கில் 13, அபிஷேக் ஷர்மா 14 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 

அதன் பின் சஞ்சு சாம்சன்  45 பந்துகளில் 58 ரன்கள் சேர்க்க ரியான் பராக் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், கடைசி இரண்டு ஓவர்களில் சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் ஆகிய இருவரும் அதிரடி காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதன்போது, சிவம் துபே 19 வது ஓவரில் அதிரடியாக இரண்டு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்து கடைசி ஓவரில் ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே இணைந்து அதிரடியாக ரன் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்த தமிழக வீரர்... கிடைத்த வாய்ப்பு!

கடைசி ஓவரின் முதல் பந்தை சந்தித்த ரிங்கு சிங் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடிக்க, ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பந்தை நழுவ விட்டார். 

பின்னர். அந்த பந்தை எடுத்த ஃபீல்டர் தூக்கி வீசிய நிலையில், ரிங்கு சிங் ஒரு ரன் ஓடும் வாய்ப்பு இருந்தது. சிவம் துபே எதிர் முனையிலிருந்து ஒரு ரன் ஓடுவதற்காக ஓடி வந்தார்.

அப்போது ரிங்கு சிங் சில அடிகள் மட்டும் எடுத்து வைத்துவிட்டு பின் வாங்கிய நிலையில், முக்கால்வாசி தூரம் ஓடி வந்துவிட்ட சிவன் துபே, மறுமுனைக்கு ஓடுவதற்குள் ரன் அவுட் ஆனார். 

ரிங்கு சிங் நிச்சயமாக ஒரு ரன் முழுவதுமாக ஓடி இருக்க முடியும் என்ற நிலையில், அவர் அதை செய்யவில்லை. அவர் ரன் ஓடப் போவதில்லை என சொல்லி இருந்தால் கூட சிவ, துபே பாதி தூரத்தில் பின்வாங்கி இருப்பார்.

ஆனால், ரிங்கு சிங் ஓடுவது போல வந்து விட்டு பின் வாங்கியதால் சிவ, துபே-வால் ரன் அவுட்டில் இருந்து தப்ப முடியாமல் போனது. 

துபே ரன் அவுட் ஆகி செல்லும் போது ரிங்கு சிங்கை முறைத்தபடியே சென்றார். சிவம் துபே 12 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்திருந்தார். ரிங்கு சிங் 9 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...