தோனி தான் உலகின் சிறந்த கேப்டன் - மனந்திறந்து பாராட்டிய இலங்கை வீரர் திசார பெரேரா 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை உலகின் சிறந்த கேப்டன் என இலங்கை அணி வீரர் திசார பெரேர தெரிவித்து உள்ளார்.

Mar 16, 2025 - 23:58

ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையில் விளையாடி உள்ள திசார பெரேரா, அப்போது தோனி தனக்கு அளித்த தன்னம்பிக்கை வார்த்தைகளையும், அவர் தன்னை நம்பிய விதத்தைப் பற்றியும் சிலாகித்து பேசி இருக்கிறார்.

"சில சமயம் தோனி எனது அருகில் வந்து, 'திசார, நீ அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன். ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடு' என்பார். அது எனது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அப்போது எனக்கு 20 வயது தான் இருக்கும். அது மிகவும் இளம் வயது. 

அப்போது நான் தோனியுடன் சேர்ந்து பணி செய்வதை மிகவும் விரும்பினேன். தனிப்பட்ட முறையில் தோனி தான் எனக்கு உலகின் சிறந்த கேப்டன். நான் அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகளில் ஆடி இருக்கிறேன். 

அதிரடி வீரராக, எனக்கு அதிக தன்னம்பிக்கையை அளித்து இருக்கிறார் தோனி. அவர் எப்போதும் என்னை நம்பினார் என்றார் திசார பெரேரா.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!