நியூசிலாந்து அவ்வளவுதான்... இனி அரையிறுதி வாய்ப்பு கஷ்டம்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலமாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலமாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியும் 12 புள்ளிகளுடன் இருப்பதோடு, நல்ல ரன் ரேட்டையும் வைத்துள்ளது. இதனால் அடுத்த இரு போட்டிகளில் கவுரவமான தோல்வியை அடைந்தாலே அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு அமைந்துள்ளது.
ஆனால் 3 மற்றும் 4 ஆகிய இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு சிக்கல் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்தாலும், அதன்பின் சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளது.
ஆனால் நியூசிலாந்து அணியின் நிலை தான் கவலைக்கிடமாக மாறியுள்ளது. ஏனென்றால் உலகக்கோப்பை தொடரில் ஆடிய முதல் 4 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி அபாரமாக வென்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகித்தது.
இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் என்று 4 கத்துக்குட்டி அணிகளையும் வீழ்த்தியது. ஆனால் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா என்று வலிமையான அணிகளுடன் மோதிய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியுள்ளது.
இதனால் நியூசிலாந்து அணி அடுத்து விளையாடும் 2 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் நியூசிலாந்து அணிக்கு அங்குதான் ட்விஸ்ட் காத்திருக்கிறது. ஏனென்றால் அடுத்த இரு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை நியூசிலாந்து அணி எதிர்த்து களமிறங்கவுள்ளது.
இந்த இரு அணிகளும் எந்த நேரத்தில் எப்படி விளையாடுவார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஜாம்பவான் அணிகளையும் திடீரென வீழ்த்தும் வல்லமை கொண்ட அணிகள் என்பதால், நியூசிலாந்து அணிக்கான அரையிறுதி வாய்ப்பு கொஞ்சம் கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் காயத்தில் இருந்து எப்போது மீண்டு வருவார் என்பது இதுவரை தெரியவில்லை. அதேபோல் அந்த அணியின் முன்னணி வீரரான மேட் ஹென்ரி காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்தே விலகியுள்ளார். கடைசி நேரத்தில் வீரர்கள் திடீரென காயமடைவது அந்த அணிக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |