பேட்டன்ட் பிரச்சனை தீவிரம்: ஆப்பிள் வாட்ச் தொழில்நுட்பம் காரணமாக கோடிகளில் அபராதம்
ஆப்பிள் வாட்ச்களில் பயன்படுத்தப்பட்ட இரத்த ஆக்ஸிஜன் கண்டறிதல் தொழில்நுட்பம், மருத்துவ சாதன தயாரிப்பாளரான Massimo Corporation காப்புரிமையை மீறியுள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் உறுதியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

634 மில்லியன் டாலர் (₹5,622 கோடி) இழப்பீடு அனுமதிக்கப்பட வேண்டும் என கலிபோர்னியா கூட்டாட்சி நடுவர் குழு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் 2020–2022 இடையே விற்பனை செய்யப்பட்ட 43 மில்லியன் ஆப்பிள் வாட்ச் மாடல்கள் பாதிப்புக்குள் வருகின்றன.
Massimo நிறுவனம், “இது எங்கள் கண்டுபிடிப்புகளைப் பாதுகாக்கும் வரலாற்றுச் சாதனை” என்று தெரிவித்துள்ளது.
ஆப்பிள், இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
முன்னதாக 2023-ல், ITC காப்புரிமை மீறல் காரணமாக சில ஆப்பிள் வாட்ச் மாடல்களை அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யத் தடை விதித்தது. இதனால், Apple Blood Oxygen சென்சரை நீக்கி புதுப்பித்த பதிப்பை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.