நேற்று 3 விக்கெட்களை எடுத்த இளம் வீரர் இன்று காலமானார்..  நடந்தது என்ன? 

ஜோஸ் பாகர், முதல்தர போட்டிகளில் 411 ரன்களை குவித்துள்ளார். அதில், 2 அரை சதங்கள் அடங்கும். 2021ஆம் ஆண்டில், வார்செஸ்டர்ஷிர் அணிக்காக ஒப்பந்தம் ஆனார்.

நேற்று 3 விக்கெட்களை எடுத்த இளம் வீரர் இன்று காலமானார்..  நடந்தது என்ன? 

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் வார்செஸ்டர்ஷிர் கவுண்டி அணிக்காக விளையாடி வந்த வெறும் 20 வயதான ஜோஸ் பாகர் காலமானார். 

பாகருக்கு என்ன நடந்தது என்பதை அவரது குடும்பம் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், இதுகுறித்து பேட்டிகொடுத்த வார்செஸ்டர்ஷிர் நிர்வாகம், பாகர் மரணம் குறித்து தற்போது எதவும் பேச வேண்டாம். அவரது குடும்பத்தின் உணர்வுகளை மதித்து, அனைவரும் நடந்துகொள்வோம் எனத் தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற கவுண்டி ஆட்டத்தில், தொர்ஹாம் அணிக்கு எதிராக அபாரமாக பந்துவீசிய வார்செஸ்டர்ஷிர் அணி வீரர் ஜோஸ் பாகர், 3 முக்கிய விக்கெட்களை கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோஸ் பாகர், முதல்தர போட்டிகளில் 411 ரன்களை குவித்துள்ளார். அதில், 2 அரை சதங்கள் அடங்கும். 2021ஆம் ஆண்டில், வார்செஸ்டர்ஷிர் அணிக்காக ஒப்பந்தம் ஆனார்.

இதுவரை 22 முதல்தர போட்டிகளில் பந்துவீசியிருக்கும் பாகர், அதில் 43 விக்கெட்களை எடுத்தார். 17 லிஸ்ட் ஏ போட்டிகளில் பந்துவீசி 24 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்து அணிக்காக மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக உருவெடுத்து வரும் நிலையில், இப்படியொரு துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், பாகருக்கு இறுதி மரியாதை செய்ய வார்செஸ்டர்ஷிர் கவுண்டி அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குடும்பத்தினர் அனுமதித்தால், கடைசி சில மணி நேரங்களில், பாகரின் உடலை வார்செஸ்டர்ஷிர் கிளப்பில் வைத்து, இறுதி மரியாதை செய்யப்படும் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் நடைபெற்ற கவுண்டி டெஸ்ட் தொடரில், பென் ஸ்டோக்ஸுக்கு எதிராக பந்துவீசிய ஜோஸ் பாகர், ஒரே ஓவரில் 34 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார். அப்போது, இந்த நிகழ்வு, பெரிய பேசுபொருளாக மாறியது.

34 ரன்கள் விட்டுக்கொடுத்தப் பிறகு, அன்றைய இரவு பாகருக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிய பென் ஸ்டோக்ஸ், அதில், ''கவலைப்பட வேண்டாம் பாகர். பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்ததால், அதிக ரன்களை அடிக்க முடிந்தது. 

உங்களது பந்துவீச்சு அபாரமாக இருக்கிறது. இதைப்பற்றி கவலைப்படாமல், எப்போதும்போல செயல்படுங்கள்'' என மெசேஜ் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...