சீனியர்களுக்கு கடும் விதிமுறை... டெஸ்டில் இருந்து ஓய்வுபெறும் விராட் கோலி....  2 பேர் ஓய்வுபெற வாய்ப்பு!

சீனியர்களுக்கு விதிக்கவுள்ள கிடுக்குபுடி விதிமுறைகள் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்டில் இருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

சீனியர்களுக்கு கடும் விதிமுறை... டெஸ்டில் இருந்து ஓய்வுபெறும் விராட் கோலி....  2 பேர் ஓய்வுபெற வாய்ப்பு!

சீனியர்களுக்கு விதிக்கவுள்ள கிடுக்குபுடி விதிமுறைகள் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்டில் இருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இங்கிலாந்து மண்ணில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜூன் 20ஆம் தேதி முதல் இந்தியா பங்கேற்க உள்ளதுடன்,  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027க்கு, இந்தியாவுக்கு இதுதான் முதல் தொடர்.

இதனால், இத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்க எதிராக தோல்விகளை சந்தித்த இந்திய டெஸ்ட் அணி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் எப்படி கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தநிலையில், டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்ததுடன், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறினார்.

இவ்வாறான ஒரு நிலையில், விராட் கோலியும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன், டெஸ்டில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
கடந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தோல்விக்கு காரணம் சீனியர்கள்தான் என பிசிசிஐ மீட்டிங்கில் பேசப்பட்டதால்தான், இந்த முடிவை எடுக்க உள்ளாராம்.

சீனியர்கள் சரியாக பயிற்சிக்கு வருவதில்லை என்றும் போட்டிகளின்போது சிறப்பாக செயல்படுவது இல்லை என்றும், சுறுசுறுப்பு இல்லை என பிசிசிஐ மீட்டிங்கில் நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சீனியர்களுக்கு கடும் விதிமுறைகளை போட உள்ளதாகவும் இதன் காரணமாகவே ரோஹித் சர்மா முன்கூட்டியே ஓய்வு அறிவித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது, சீனியர், ஜூனியர்கள் என அனைவரும் பிசிசிஐ ஒதுக்கும் அறையில்தான் தங்க வேண்டுமாம். மேலும், பயிற்சிக்கு சரியாக நேரத்தில் வரவில்லை என்றால், போட்டிக்கான பிளேயிங் 11-ல் இருந்து நீக்கப்படுவார்களாம். 

தொடர் முடியும் வரை, சில நாட்களை தவிர்த்து, ஏனைய நாட்களில் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதாம்.

இந்த நிலையில், தோல்விக்கு தங்கள் மீது பழி சுமத்துவதை எதிர்த்து, அதிருப்தி காரணமாக கோலி ஓய்வு அறிவிக்க உள்ளதாகவும், அவரும் ஒருநாள் போட்டிகளில் தொடர்வார் என கூறப்படுகின்றது.

மேலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரருக்கான இந்திய அணியில்  புஜாரா, ரஹானே ஆகியோரது பெயர்கள்  இல்லாவிட்டால் அவர்களும் ஓய்வினை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.