சிந்துஜா மரணம்: வைத்தியர் ஒருவரும் பணியிடை நீக்கம்

சுகாதார அமைச்சினால் இது தொடர்பான கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Aug 21, 2024 - 17:33
சிந்துஜா மரணம்: வைத்தியர் ஒருவரும் பணியிடை நீக்கம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மரியராஜ் சிந்துஜா என்ற இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர பணியிடை நீக்கம் செய்யப்படவுள்ளார்.

சுகாதார அமைச்சினால் இது தொடர்பான கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், அதிக இரத்தப்போக்கு காரணமாக கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்குரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வைத்தியர்களின் அசமந்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றச் சாட்டப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

எனினும் இதுவரையில் குறித்த கடிதம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையைச் சென்றடையவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!