ரோகித் சர்மாவுக்கு அறுவை சிகிச்சை.. இந்திய அணிக்கு எப்போது திரும்புவார்?
இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகை கிரிக்கெட் வடிவங்களுக்கும் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுக்கு இடது காலில் பிரச்சினை இருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் ஷர்மா ஓய்வு பெற்றுள்ள நிலையில், நீண்ட காலமாக உடலில் இருக்கும் பிரச்சினையை சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ள தீர்மானித்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகை கிரிக்கெட் வடிவங்களுக்கும் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுக்கு இடது காலில் பிரச்சினை இருந்தது.
இதற்கான சிகிச்சையை தள்ளிவைத்து விளையாடி வந்த ரோஹித், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய இரண்டு வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றார்.
இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவர், 2027 உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு, அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். இந்த அறுவை சிகிச்சை 2025 ஐபிஎல் முடிந்த பிறகு நடைபெற வாய்ப்புள்ளது.
காயம் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவால் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாட முடியவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும்தான் விளையாடுவதால் ரோஹித் சர்மா அறுவை சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள முடிவெடுத்தாக தெரிகிறது.
இதனால் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு ரோகித் சர்மா இந்த அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபடப் போகிறார்.
2016 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட ரோகித் சர்மா, மூன்று மாதம் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார்.
தற்போது இந்திய அணி ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது. ஆனால், இருநாட்டுக்கு இடையிலான பிரச்சினை காரணமாக இந்த தொடர் நடைபெறுமா என்று தெரியவில்லை.
அத்துடன், ஆசிய கோப்பை போட்டிகளும் நடைபெறாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக ரோகித் சர்மா உடல் தகுதியை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.