இங்கிலாந்து மண்ணில் பல்வேறு சாதனைகளை தகர்த்த ஜடேஜா.. இந்திய அணி அதிரடி ஆட்டம்!

கடைசியாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் 77 ரன்கள் அடித்த ஜடேஜா ஆறு இன்னிங்ஸ்களாக அரை சதம் அடிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் 11 மற்றும் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இங்கிலாந்து மண்ணில் பல்வேறு சாதனைகளை தகர்த்த ஜடேஜா.. இந்திய அணி அதிரடி ஆட்டம்!

இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஜடேஜா, வெளிநாட்டு மண்ணில்  பெரிய அளவு சாதிக்கவில்லை என்ற விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 23 வது அரை சதத்தை பூர்த்தி செய்து இருக்கின்றார். 

கடைசியாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் 77 ரன்கள் அடித்த ஜடேஜா ஆறு இன்னிங்ஸ்களாக அரை சதம் அடிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் 11 மற்றும் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இதனால் ஜடேஜாவை நீக்கிவிட்டு அவருக்கு பதில் குல்தீப்பை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்த  நிலையில், இந்திய அணி 210 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்ற நிலையில் தடுமாறியது. அப்போது களத்தில் நின்று கொண்டிருந்த கில்லுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார்.

அவர் தன்னுடைய விக்கெட்டை பறி கொடுக்காமல் ரன்கள் சேர்க்க மறுமுனையில் கில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். இந்த தருணத்தில் 310 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது.

இதேவேளை, பர்மிங்காம் மைதானத்தில் அதிக அரை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஜடேஜா இரண்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.

ஒரு இன்னிங்ஸில் கவாஸ்கர் மூன்று முறை 50 ரன்கள் அடித்துள்ள நிலையில் விராட் கோலி, தோனி, ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோர் இரண்டு அரை சதங்கள் அடித்திருக்கிறார்கள். 

இதேபோன்று இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழாவது மற்றும் அதற்கு கீழ் களமிறங்கும் வீரர்களில் அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஜடேஜா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் 12 அரை சதத்துடன் முதல் இடத்தில் உள்ள நிலையில் ஜடேஜா 7 அரை சதத்துடன் இரண்டாவது இடத்திலும், அஸ்வின் ஆறு அரை சதத்துடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.

இதேபோன்று இங்கிலாந்து மண்ணில் பேட்டிங்கில் 700 ரன்களுக்கும் மேலும் பந்துவீச்சில் 25 விக்கெட்டுகள் மேலும் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்திருக்கின்றார். 

அதாவது, பேட்டிங்கில் 739 ரன்களும், பந்துவீச்சில் 28 விக்கெட்டுகளையும் ஜடேஜா இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி இருக்கின்றார்.