டி20 உலகக்கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது சந்தேகம்! இதுதான் காரணம்!

வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அடுத்து, 2026 டி20 உலகக் கோப்பைக்கான நடவடிக்கைகளை இந்திய அணி  தொடங்கும்.

டி20 உலகக்கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது சந்தேகம்! இதுதான் காரணம்!

2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, இந்த ஆண்டு 'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து, 2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையையும் இந்திய அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அடுத்து, 2026 டி20 உலகக் கோப்பைக்கான நடவடிக்கைகளை இந்திய அணி  தொடங்கும்.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா ஐந்து டி20 போட்டிகளில் இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் விளையாடும். 

அத்துடன், உலகக் கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்தை ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா எதிர்கொள்கிறது. 

2025 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு கேஎல் ராகுல் மீண்டும் டி20 அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், மோசமான கிரிக்கெட் விளையாடி வரும் ரிஷப் பண்ட் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது கடினம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, திலக் வர்மா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறுகின்றனர். அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்கலாம். 

வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் மாற்று வீரராக இருக்க முடியும் என்பதுடன், வருண் சக்கரவர்த்தியும் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உலகின் நம்பர் 1 பவுலர் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. 

ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதி மற்றும் பணிச்சுமை காரணமாக, டி20 உலகக்கோப்பையில் பும்ராவை நீக்கிவிட்டு, அவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2026 டி20 உலகக்கோப்பை உத்தேச இந்திய அணி வீரர்கள்

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
கே.எல். ராகுல்
ஷ்ரேயாஸ் ஐயர்
சுப்மன் கில்
அபிஷேக் சர்மா
சஞ்சு சாம்சன்
திலக் வர்மா
ஹார்திக் பாண்ட்யா
அக்சர் படேல்
வருண் சக்ரவர்த்தி
அர்ஷ்தீப் சிங்
ஹர்ஷித் ராணா
குல்தீப் யாதவ்
முகமது சிராஜ்
வாஷிங்டன் சுந்தர்