ஒப்பந்தத்தை மீறிய சுப்மன் கில்... மெகா தவறு.. கடுப்பான பிசிசிஐ.. நடந்தது என்ன?
Adidas நிறுவனம் சுப்மன் கில்லின் இந்த செயலால் நிச்சயம் அதிருப்தி அடைந்திருக்கும் என சமூக வலைதளத்தில் பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில், இந்திய அணி 427 ரன்கள் எடுத்த நிலையில், ஓய்வறையில் இருந்து கேப்டன் சுப்மன் கில் டிக்ளேர் செய்வதாக அறிவித்து, ஆடுகளத்தில் இருந்த வீரர்களை அழைத்தார்.
அவ்வாறு அவர் ஓய்வறையில் நின்று அழைக்கும் போது அணிந்திருந்த டி-ஷர்ட்டில் Nike லோகோ தெளிவாகத் தெரிந்தது. ஆனால், இந்திய அணி Adidas நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, இந்திய வீரர்கள் அணியும் உடையில் Adidas நிறுவனத்தின் லோகோ தான் இடம்பெறும். இந்திய அணி வீரர்கள் அனைவரும் பிசிசிஐயின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது, Adidas நிறுவனம் தவிர மற்ற நிறுவனங்களின் உடையை, இந்திய அணி ஆடும் போட்டிகளின் போது அணியக்கூடாது என்ற விதிமுறையும் உள்ளது.
இந்த நிலையில், Adidas நிறுவனம் சுப்மன் கில்லின் இந்த செயலால் நிச்சயம் அதிருப்தி அடைந்திருக்கும் என சமூக வலைதளத்தில் பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
அடிடாஸ் நிறுவனத்திற்கும் நைக் நிறுவனத்திற்கும் பல்லாண்டுகளாகப் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், சுப்மன் கில் Nike நிறுவனத்தின் உடையை,அணிந்து அது கேமராவிலும் பதிவானதுடன் இது முக்கியமான விதிமீறலாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் உடைக்கு உள்ளே சுப்மன் கில் Nike நிறுவனத்தின் உடை ஒன்றை அணிந்து அது வெளியே தெரியாது என பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு இருக்கலாம்.
ஆனால், அவர் மேலே இருந்த இந்திய அணி உடையை நீக்கி விட்டு இருக்கும் போது டிக்ளர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதால் தான் அவர் நைக் உடையுடன் கேமராவில் தோன்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.