யாருய்யா இவரு? ஒரே நாளில் இத்தனை ஓவர்களா? அதிக ஓவர்களை வீசிய பும்ரா! 

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் 52.4 ஓவர்களை வீசியிருப்பது பேசப்பட்டு வருகின்றது. 

Dec 30, 2024 - 02:47
யாருய்யா இவரு? ஒரே நாளில் இத்தனை ஓவர்களா? அதிக ஓவர்களை வீசிய பும்ரா! 

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் 52.4 ஓவர்களை வீசியிருப்பது பேசப்பட்டு வருகின்றது. அதிலும் 4ஆவது நாளில் மட்டும் பும்ரா 24 ஓவர்களை வீசி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் 4வது நாளில் இந்திய அணி 369 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. 

பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 4வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களை குவித்தது. ஏற்கனவே 105 ரன்கள் முன்னிலையுடன் இருப்பதால், அந்த அணியின் ஸ்கோர் 333 ரன்களாக இருக்கிறது.

4வது நாளில் ஆஸ்திரேலியா அணியை விரைவாக ஆல் அவுட் செய்ய வாய்ப்பு கிடைத்த போது, இந்திய அணி அந்த வாய்ப்பினை தவறவிட்டதுடன், கடைசியில் களமிறங்கிய போலண்ட் - லயன் இருவரும் 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கடந்த 50 ஆண்டுகளில் மெல்போர்ன் மைதானத்தில் 270 ரன்களுக்கு மேல் எந்த இலக்கும் சேஸ் செய்யப்பட்ட வரலாறே இல்லை என்ற நிலையில், காபா மைதானத்தில் ஒரே நாளில் 324 ரன்களை இந்திய அணி விளாசி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. 

அதுபோல் இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றியை பெறும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

அத்துடன், சச்சின்,தோனி, விராட் கோலி என்று பேட்ஸ்மேன்களை மட்டுமே இத்தனை ஆண்டுகளாக ரசிகர்கள் நம்பி இருந்த நிலையில், முதல்முறையாக பும்ரா என்ற ஒரு பந்துவீச்சாளர் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர்.

அதற்கு ஏற்றதுபோது, 4வது நாள் ஆட்டத்தில் பும்ரா மொத்தமாக 24 ஓவர்களை வீசி 56 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 

முதல் இன்னிங்ஸில் 28.4 ஓவர்களை வீசிய பும்ரா 99 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொத்தமாக இதுவரை 52.4 ஓவர்களை வீசி இருக்கிறார். ஒரு நாளில் வேகப்பந்துவீச்சாளர்கள் 20 ஓவர்கள் வரை வீசுவதே அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!