டி20 உலக கோப்பையில் கோலி விளையாடுவார்.. காரணம் இதுதான்! 

டி20 உலக கோப்பை இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறுவாரா அல்லது நீக்கப்படுவாரா? என்பது தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றது.

Mar 13, 2024 - 10:45
டி20 உலக கோப்பையில் கோலி விளையாடுவார்.. காரணம் இதுதான்! 

டி20 உலக கோப்பை இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறுவாரா அல்லது நீக்கப்படுவாரா? என்பது தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றது.

மாறிவரும் டி20 கிரிக்கெட் அணுகுமுறைக்கு அமைய பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும், விராட் கோலி டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் நீக்கப்படுவார் என்று தகவல் வெளியானது.

எனினும், விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருந்தார். மேலும் ஆரம்ப காலகட்டங்களில் போல, ரன்களை குவித்து வருவதை பார்க்க முடிகிறது.

அமெரிக்காவில் டி20 உலக கோப்பை தொடரில் ஒரு பகுதி நடக்கும் நிலையில், சர்வதேச அளவில் பிரபலமான அனைத்து வீரர்களும் பங்கு பற்றினால்தான் அது பிரபலமாகும். 

அத்துடன், அமெரிக்காவில் டி20 உலக கோப்பையை நடத்துவதே அந்த நாட்டில் கிரிக்கெட்டை இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்காகத்தான். இப்படி இருக்கும் நிலையில், விராட் கோலி போன்ற ஒரு வீரரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அணியிலிருந்து நீக்காது என்று நம்பப்படுகிறது. 

ஆனால் தேர்வு குழு எந்தவிதமான அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறும்  கருத்து வெளியிட்டு உள்ளார்.

டி20 உலக கோப்பை இந்திய அணியில் விராட் கோலி இருக்க மாட்டார் என்பது உண்மையாக இருக்க முடியாது. அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பையை நடத்தும் பொழுது, விராட் கோலி நீக்கப்பட மாட்டார். 

இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நியூயார்க்கில் இருக்கிறது. இப்படியான சூழலில் விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் விளையாடுவார்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!