ஹர்திக் பாண்டியா மோசமான செயல்பாடு: விளாசிய இர்பான் பதான்

தான் வீசிய முதல் ஓவரிலேயே 15 ரன்கள் கொடுத்த ஹர்திக், தனது இரண்டாவது ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தி இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்தார். 

Apr 16, 2024 - 01:19
ஹர்திக் பாண்டியா மோசமான செயல்பாடு: விளாசிய இர்பான் பதான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மோசமான முறையில் செயற்பட்டதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சனத்தை முன் வைத்து உள்ளார்.

இந்தப் போட்டியில், ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை மற்ற பந்துவீச்சாளர்களுக்கு அளிக்காமல் தானே வீசியதுடன், ஒரு கேப்டனாக தனது அணியின் பந்துவீச்சாளர்களையே நம்பவில்லை என பலரும் விமர்சனம் செய்தனர்.

தான் வீசிய முதல் ஓவரிலேயே 15 ரன்கள் கொடுத்த ஹர்திக், தனது இரண்டாவது ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தி இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்தார். 

எனினும், கடைசி ஓவரை ஆகாஷ் மதவாலுக்கு அளிக்காமல் தானே வீசிய ஹர்திக் பாண்டியா, அதன் மூலம் சிஎஸ்கே அணியின் ரன் குவிப்பை கடைசி ஓவரில் தடுக்கலாம் என நினைத்தார். ஆனால், சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் 26 ரன்களை விளாசியது.

இது குறித்து பேசிய இர்பான் பதான், "கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசியது ஆகாஷ் மதவால் மீதான நம்பிக்கை இல்லாததை வெளிக்காட்டியதுடன்,  கடைசி ஓவர் பந்துவீச்சாளராக அவருக்கு திறமை இல்லாததையும் காட்டியது" என கூறி உள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!