கேப்டனாக சுப்மன் கில்... இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு  அணிக்கு திரும்பிய வீரர்.. முழு விவரம்!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து, ஜூன் 20ஆம் தேதி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

கேப்டனாக சுப்மன் கில்... இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு  அணிக்கு திரும்பிய வீரர்.. முழு விவரம்!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து, ஜூன் 20ஆம் தேதி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் புதிய வீரர்கள் கொண்ட அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளதுடன்,  துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அத்துடன், இந்திய டெஸ்ட் அணியில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயர் இடம் பிடித்திருக்கின்றார்.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சனுக்கு முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்திருக்கிறது. 

தமிழகத்தைச் சென்ற ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளதுடன், அபிமன்யூ ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ்குமார் ரெட்டி ஜடேஜா போன்ற வீரர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள். 

பௌலிங் படையில் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் டீப் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ், ஜடேஜா, சுந்தர் ஆகியோர் உள்ளனர்.

முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இதேவேளை, சர்பராஸ்கான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது சமி ஆகிய மூன்று வீரர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணி

சுப்மல் கில் (கேப்டன்)
ரிஷப் பண்ட் (துணை கேப்டன்)
ஜெய்ஸ்வால்
கேஎல் ராகுல்
சாய் சுதர்சன்
கருண் நாயர்
ஜடேஜா
வாசிங்டன் சுந்தர்
குல்தீப் யாதவ்
ஷர்துல் தாக்கூர்
நிதீஷ் குமார் ரெட்டி
முகமது சிராஜ்
பும்ரா
பிரசித் கிருஷ்ணா
ஆர்ஸ்தீப் சிங்
அபிமன்யூ ஈஸ்வரன்
துருவ் ஜூரல்
ஆகாஷ் தீப்