மூன்று அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி... பும்ரா குறித்து கடைசி நேரத்தில் அறிவிப்பு!
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 371 ரன்கள் தோல்வியை தழுவி இருப்பது மிகவும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 371 ரன்கள் தோல்வியை தழுவியது விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை தொடங்கவுள்ளது.
கீழ் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் அடைந்ததும் முதல் போட்டியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்பட்டதுடன், இந்திய அணியின் பந்துவீச்சு அணியை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் பயிற்சியாளர் கம்பீர் உள்ளார்.
இந்த நேரத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதாவது முதலாவது மாற்றமாக ஜடேஜாவுக்கு பதில் குல்தீப் யாதவ் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால் கடந்த போட்டியில் ஜடேஜா பந்துவீச்சில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பேட்டிங்கிலும் அவர் சாதிக்கவில்லை. மொத்தமாகவே அவர் முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் தான் வீழ்த்தினார்.
ஜடேஜா பந்து வீச்சை எதிர்கெண்ட இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடுகின்றனர். இதனால் ஜடேஜாவுக்கு பதில் இடது கை லெல் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் அணிக்குள் வர வாய்ப்பு இருக்கிறது.
இதேபோன்று ஆல்ரவுண்டரான சர்துல் தாக்கூர் நீக்கப்படவும் வாய்ப்பு இருக்கின்றது. பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்ததால் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் அவர் பேட்டிங்கில் கொஞ்சம் கூட சோபிக்காத நிலையில், முதல் இன்னிங்சில் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அத்துடன், இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தாலும், ஒரு ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
ஆனால், இந்தியாவில் வெற்றிக்கு எந்தவித பயனையும் அளிக்காத நிலையில், நிதிஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஆர்ஸ்தீப் சிங்கிற்க்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அவர் களமிறங்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா மாட்டாரா என்பது போட்டி தொடங்குவதற்கு முன்பு தான் முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவிக்கின்றது.
ஒருவேளை பும்ரா விளையாடவில்லை என்றால் அவருக்கு பதில் ஆகாஷ் தீப் களமிறங்க கூடும்.
இந்திய அணி பிளேயிங் லெவன்
ஜெய்ஸ்வால்
ராகுல்
சாய் சுதர்சன்
சுப்மன் கில்
கருண் நாயர்
ரிஷப் பண்ட்
நிதிஷ் குமார் ரெட்டி
குல்தீப் யாதவ்
சிராஜ்
ஆர்ஸ்தீப் சிங்/ பிரசித் கிருஷ்ணா
ஆகாஷ் தீப்/ பும்ரா