பிட்ச்சில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்... இங்கிலாந்து மாஸ்டர் பிளான்...  என்ன செய்ய போகிறது இந்திய அணி?

மூன்றாவது போட்டியில் வெல்லும் அணிக்கே, டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், மூன்றாவது போட்டி முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

பிட்ச்சில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்... இங்கிலாந்து மாஸ்டர் பிளான்...  என்ன செய்ய போகிறது இந்திய அணி?

இந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் மாற்றப்பட்டடுள்ள நிலையில், இதனை இந்திய அணி சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்க போகின்றது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து அணி, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில், இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த நிலையில், மூன்றாவது போட்டியில் வெல்லும் அணிக்கே, டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், மூன்றாவது போட்டி முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

இலண்டன் லார்ட்ஸ் மைதானம், பொதுவாகவே வேகத்திற்கு சாதகமதாக இருக்கும். முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 230+ ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 300+ ரன்களாகவும் இருக்கிறது. 

அதாவது, துவக்கத்தில், முழுக்க முழுக்க வேகத்திற்கு சாதகமாக இருக்கும் என புள்ளி விபரம் சொல்கிறது. குறிப்பாக, இங்கு கடந்த 6 போட்டிகளில், முதல் செஷனில் மட்டும் 22 விக்கெட்கள் விழுந்துள்ளது. அந்த அளவுக்கு துவக்கத்தில், பிட்ச் வேகத்திற்கு சாதகமாக இருக்கும்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்சை மாற்றும்படி, பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிட்சை பார்த்தபோது, அது முதல் நாளிற்கு மட்டுமே வேகத்திற்கு சாதகமாக இருக்கும் என்பதுபோல் தெரிந்த வந்ததாகவும், இதனை மாற்றும்படி தெரிவித்தாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு மைதானத்திலும், 4-5 பௌலிங் பிட்ச்கள் இருக்கும். இதில் ஒன்றைதான், போட்டிக்காக தேர்வு செய்வார்கள். மேலும், எந்த நாடு இருதரப்பு தொடரை நடத்துகிறதோ, அந்த நாடுதான் பிட்ச் எப்படி வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளலாம். 

அந்த அடிப்படையில், லார்ட் போட்டிக்கான பிட்சை பார்த்தபோது, இது முதல் நாளுக்கு மட்டுமே வேகத்திற்கு சாதகமாக இருக்கும் என்பதுபோல் மெக்கல்லத்திற்கு தோன்றியிருக்கிறது.

இதனால், உடனே பிட்சை மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினாராம். இதனால், அருகில் இருக்கும் பௌலிங் பிட்சை, உடனே தயார் செய்யும் வேலையில், ஊழியர்கள் களமிறங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த பிட்சில், எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ஸ்விங் அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதாவது, மூன்று நாட்களில் போட்டி நறைவுபெறும் வகையில் பிட்ச் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச், ஆசிய கண்டத்தில் இருப்பதுபோல் இருந்ததாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் மெக்கல்லம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால்தான், பிட்சை உடனே மாற்றியமைத்துள்ளார்களாம்.

இங்கிலாந்து பௌலர் ஜோப்ரா ஆர்ச்சர், நீண்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார். மூன்றாவது டெஸ்டில், அபாரமாக பந்துவீச வாய்ப்புள்ளது. இதனால்தான், பிட்சை முழுக்க முழுக்க பௌலர்களுக்கு சாதகமாக வடிவமைக்க முடிவு செய்துள்ளார்களாம்.

இந்திய அணியில் ஜஸ்பரீத் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இதனால், பிட்ச் வேகத்திற்கு சாதகமாக இருந்தால், அது இரு தரப்புக்கும் சாதக பாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. 

ஆகையால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அடிக்கடி ட்விஸ்ட் இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நாளை 10ஆம் தேதி துவங்கவுள்ளது.