இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டி20 போட்டி அட்டவணை இதோ!

 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் தரப்பிலும் முக்கிய வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Nov 21, 2023 - 23:48
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டி20 போட்டி அட்டவணை இதோ!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 23 அன்று தொடங்கவுள்ளதுடன், சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி பங்கேற்க உள்ளது. 

 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் தரப்பிலும் முக்கிய வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ களமிறக்க உள்ளதுடன், அதன் மூலம். 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு இப்போதே அணியை தயார் செய்ய துவங்கி உள்ளது.

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்காத நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்க உள்ள இந்திய டி20 அணி :

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், சிவம் துபே, ரவி பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ் குமார். 

டி20 போட்டிகள் அட்டவணை :

முதல் டி20 போட்டி - நவம்பர் 23 - விசாகப்பட்டினம்

2வது டி20 போட்டி - நவம்பர் 26 - திருவனந்தபுரம்

3வது டி20 போட்டி - நவம்பர் 28 - கௌஹாத்தி

4வது டி20 போட்டி - டிசம்பர் 1 - ராய்பூர்

5வது டி20 போட்டி - டிசம்பர் 3 - பெங்களூர்

டி20 போட்டிகள் ஆரம்பிக்கும் நேரம் 

இந்த தொடரின் ஐந்து போட்டிகளும் இரவு 7 மணிக்கு ஆரம்பித்து நடைபெறும். சுமார் மூன்று மணி நேரம் வரை போட்டிகள் நடைபெறும் என்பதால், இரவு 7 முதல் 10.30 மணி வரை போட்டிகள் நடந்து முடியும் என எதிர்பார்க்கலாம்.

எந்த சேனலில் பார்ப்பது?

இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரை ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் ஆங்கிலத்தில் பார்க்கலாம். கலர்ஸ் தொலைக்காட்சியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் பார்க்கலாம். கலர்ஸ் சினி பிளக்ஸ் சூப்பர்ஹிட்ஸ் சேனலில் ஹிந்தியில் பார்க்கலாம்.

எப்படி இலவசமாக பார்ப்பது?

இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரை Jio Cinema appஇல் இலவசமாக பார்க்கலாம். சந்தா கட்டணம் கட்டத் தேவையில்லை. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் கிரிக்கெட் வர்ணனை செய்யப்படுகிறது. Jio Cinema இணையதளத்திலும் போட்டிகளை இலவசமாக காணலாம்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!