டெஸ்ட் தரவரிசையில் அதிரடி மாற்றம்... முதன்முறையாக டாப் இடத்துக்கு சென்ற சுப்மன் கில்!
ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
அதாவது, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அதிரடியாக ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அத்துடன், டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அத்துடன், பந்துவீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர்களே முதல் இடத்தில் உள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மூன்று சதங்கள் அடித்தார்.
இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் எடுத்து வரலாற்று சாதனை நிகழ்த்தி இருந்தார். இந்த நிலையில், அவர் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 19 இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
இதுவே அவரது சிறந்த ஐசிசி டெஸ்ட் தரவரிசை இடம் என்பதுடன், இதற்கு முன்பு அவர் 14வது இடத்தில் இருந்தது அவரது சிறந்த தரவரிசையாக இருந்தது.
இதேவேளை, அபாரமாக விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், இந்த தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 158 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணிக்காக அதிக ரன் குவித்த வீரராக உள்ள ஜேமி ஸ்மித், தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறியுள்ளார்.
அத்துடன், ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருவதுடன், தென் ஆப்பிரிக்க அணியின் வியான் முல்டர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட்டில் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். இரண்டாவது இடத்தில் வங்கதேச அணியின் மெஹிதி ஹாசன் மிராஸ் இருக்கிறார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்.. பிசிசிஐ அதிரடி முடிவு!
டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை:
ஹாரி புரூக் (இங்கிலாந்து)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா)
ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)
சுப்மன் கில் (இந்தியா)
டெம்ப் பவுமா (தென் ஆப்பிரிக்கா)
ரிஷப் பண்ட் (இந்தியா)
கமிந்து மெண்டிஸ் (இலங்கை)
ஜேமி ஸ்மித் (இங்கிலாந்து)
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை:
ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா)
காகிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா)
பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)
ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா)
நௌமன் அலி (பாகிஸ்தான்)