ரோஹித்துக்கு பதிலாக அணியில் சேர்க்கப்படவுள்ள இளம் வீரர்.... வெளியான தகவல்
இங்கிலாந்து மண்ணில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளதுடன், இத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து மண்ணில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளதுடன், இத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன், இந்திய டெஸ்ட் அணிக் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு அறிவித்திருப்பதால், மாற்று கேப்டன், மாற்று ஓபனர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
மாற்று ஓபனராக கே.எல்.ராகுல் இருப்பாரா அல்லது புதிய வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில், இந்த விஷயம் குறித்து, தேர்வுக்குழு முன்னாள் வீரர் எம்எஸ்கே பிரசாத் பேசியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள எம்.எஸ்.கே. பிரசாத், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் ரோஹித் சர்மா அணியில் இருந்திருந்தால், சாய் சுதர்ஷன் பேக்கப் ஓபனராக தேர்வாகி இருப்பார் என்றும் கூறினார்.
தற்போது, ரோஹித் இல்லை என்பதால், சுதர்ஷனுக்கு ஓபனர் வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதுதான், சரியான நேரம். சுதர்ஷன் சரியான பார்மில் இருக்கிறார் எனவும் குற்பிட்டார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரும் தேவை. 135+ வேகத்தில் இரண்டு பக்கங்களிலும் ஸ்விங் செய்வார். டி20 பார்மெட்டில், அதிவிரைவாக 100 விக்கெட்களை கைப்பற்றிய பௌலராக இருக்கிறார்.
அவர் தற்போது நல்ல பார்மில் இருப்பதால், நிச்சயம் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஸ்பின்னர்கள் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் இருவரும் முழுநேர பேட்டரை போல ஆட முடியும் அதனால், ஷ்ரேயஸ் ஐயரை சேர்க்க தேவையில்லை.
குல்தீப் சரியான பார்மில் இருப்பதால், அக்சர் படேலை நீக்குவதுதான் சரியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.