ஏமாற்றிய இங்கிலாந்து அணி...  இந்தியா வைத்த ஆப்பு... என்ன நடந்தது? அடுத்த போட்டியில் அதிரடி மாற்றம்!

ஒரு நாள் கிரிக்கெட்டை போல் விளையாடிவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் புதிய நடைமுறையை கொண்டு வருகிறோம் என்று இங்கிலாந்து அணி ஏமாற்றி வருகிறது. 

ஏமாற்றிய இங்கிலாந்து அணி...  இந்தியா வைத்த ஆப்பு... என்ன நடந்தது? அடுத்த போட்டியில் அதிரடி மாற்றம்!

இங்கிலாந்து அணி  கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்து வந்து ஏமாற்று வேலையை இந்தியா கண்டுபிடித்து அதற்கு சரியான ஆப்பை வைத்திருக்கின்றது. 

பொதுவாக ஒவ்வொரு அணியும் தங்களது சொந்த மண்ணில் விளையாடும் போது தங்களுக்கு ஏற்றவாறு ஆடுகளம் அமைப்பது வழக்கம். உதாரணமாக இந்திய அணி சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

அத்துடன், வெளிநாடுகளில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அந்தந்த அணிகள் ஆடுகளம் தயாரிக்கும் என்ற நிலையில், இங்கிலாந்து அணி, பொய் பேஸ் பால் என்ற ஒரு புதிய யுத்தியை கடைப்பிடிக்கின்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி ரன்கனை சேர்க்கும் முறையை பேஸ் பால் என்கின்றனர். இந்த பேஸ் பால் வந்த பிறகு மற்ற அணிகள் 100 ஓவர்கள் சந்தித்து 300 ரன்கள் மேல் அடிக்கும் ஸ்கோரை இங்கிலாந்து அணி 60 ஓவரில் குவித்து விடும்.

இதன் காரணமாக, இங்கிலாந்து அணி போட்டியில் வெற்றி பெறும் நிலை ஏற்படுவதுடன், இப்படித்தான் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 371 என்ற இலக்கை கடைசி நாளில் இங்கிலாந்து அணி அபாரமாக எட்டியது. 

இதன் மூலம், இங்கிலாந்து அணி ரன் குவிப்புக்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரித்து விட்டு எதிரணியினர் நிர்ணயிக்கும் ஸ்கோரை விரைவாக எட்டி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று விடலாம் என்ற ஒரு புதிய முறையை கடைப்பிடித்து வருவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்

ஒரு நாள் கிரிக்கெட்டை போல் விளையாடிவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் புதிய நடைமுறையை கொண்டு வருகிறோம் என்று இங்கிலாந்து அணி ஏமாற்றி வருகிறது. 

இங்கிலாந்து பிட்ச் என்றால் பந்து நன்றாக ஸ்விங்க ஆகும் என்ற நடைமுறை மாறி தற்போது ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளமே வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் டி20 போட்டிகளில் அபாரமாக விளையாடும் இங்கிலாந்து வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடி ரன்களை சேர்த்து வெற்றி பெறுகின்றனர். 

அத்துடன், பந்து பழையதாக மாறினால், அது எளிதாக அடிக்கும் டியூக் வகை பந்துகளையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பயன்படுத்துகிறது. 
ஒருவேளை ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஸ்விங் ஆனால் அந்த ஆடுகளத்தில் இங்கிலாந்து அணி வேகமாக விளையாடி 300 ரன்களை அடித்தாலும் விக்கெட்டுகளை இழந்து விடுகிறது. 

இந்த நடைமுறை அவர்களுக்கு கை கொடுப்பதால் தான் இதே போன்ற ஆடுகளத்தை தயாரிக்கின்றனர். இதனை கண்டுபிடித்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு நேரத்தையும் கொடுக்கக் கூடாது, இலக்கையும் அதிகமாக வைக்க வேண்டும் என இரண்டாவது டெஸ்டில் நான்காவது நாள் இறுதியில் தான் இங்கிலாந்துக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பை கொடுத்தது. 

ஆனால் 608 ரன்களை அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் அதனை இங்கிலாந்து அணி வீரர்களால் எட்ட முடியவில்லை. மேலும் இங்கிலாந்து அணி வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தையும் ஆட தெரியாததால் அவர்கள் தங்களுடைய 10 விக்கெட்டுகளையும் இழந்தனர். 

இந்த நிலையில், இந்தியா இந்த நடைமுறையை கண்டுபிடித்தது மட்டுமல்லாமல், இந்திய வீரர்களும் பேட்டிகளில் சிறப்பாக விளையாடவதால் அடுத்த டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.