விராட் கோலி ஓய்வு குறித்து கவலையேபடாத பிசிசிஐ.. எல்லாமே நாடகம்... ரசிகர்கள் சோகம்!
விராட் கோலி தான் ஓய்வு பெறப் போவதை பிசிசிஐ-யிடம் சில நாட்களுக்கு முன்பே தெரிவித்து விட்ட நிலையில், அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ விராட் கோலி இடம் கேட்டுக் கொண்டதாக அப்போது சொல்லப்பட்டது.

விராட் கோலி தான் ஓய்வு பெறப் போவதை பிசிசிஐ-யிடம் சில நாட்களுக்கு முன்பே தெரிவித்து விட்ட நிலையில், அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ விராட் கோலி இடம் கேட்டுக் கொண்டதாக அப்போது சொல்லப்பட்டது.
ஆனால், அது ஒரு சம்பிரதாயத்துக்காகச் சொல்லப்பட்டதாகவம், தனிப்பட்ட முறையில் எந்த ஒரு பிசிசிஐ அதிகாரியோ, முன்னாள் வீரர்களோ ஓய்வு முடிவை திரும்பப் பெறுமாறு விராட் கோலியிடம் பேசவில்லை என்று கூறப்படுகின்றது.
விராட் கோலியின் ஓய்வு முடிவை திரும்பப் பெற வைப்பதற்கு பிசிசிஐ உண்மையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர் ஓய்வு பெற்றால் ஓய்வு பெற்றுக்கொள்ளட்டும் என்ற முடிவில் தான் பிசிசிஐ அதிகாரிகள் இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீரை நியமித்தது, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரைப் படிப்படியாக அணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் என கூறப்பட்டது.
கௌதம் கம்பீர் பயிற்சியாளராகப் பதவி ஏற்கும் முன்னரே, விராட் கோலியும் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தனர்.
அதன் பின்னர் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருவரும் விளையாடி வந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தற்போது ஓய்வு தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போதே ஓய்வு பெறும் முடிவில் இருந்திருந்தால், அப்போதே தங்களது ஓய்வை அறிவித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் இருவருமே இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் தற்போது இது தொடர்பாக அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் இருவரும் ஓய்வை அறிவித்திருக்கிறார்கள். விராட் கோலி ஓய்வை அறிவிப்பார் என பிசிசிஐ எதிர்பார்க்கவில்லை.
அவர் தன் ஓய்வு முடிவை அறிவித்த போது, அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடலாம் என்பதை பிசிசிஐ அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை.
சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் உயிர்ப்போடு இருப்பதற்கு விராட் கோலி ஒரு முக்கிய காரணமாக இருந்தவர். அவர் ஓய்வு குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து அவரிடம் பேசியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.