இலங்கை வெற்றிப்பெற்றால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்? இறுதிப்போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா?
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவும் இலங்கையும் இன்று (செப்டம்பர் 26) மோத உள்ளன. இந்தப் போட்டியுடன் சூப்பர் ஃபோர் சுற்று முடிவுக்கு வருகிறது.
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவும் இலங்கையும் இன்று (செப்டம்பர் 26) மோத உள்ளன. இந்தப் போட்டியுடன் சூப்பர் ஃபோர் சுற்று முடிவுக்கு வருகிறது.
சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் ஆடின. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று நான்கு புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. வங்கதேச அணி ஒரு வெற்றி மட்டும் பெற்று இரண்டு புள்ளிகளுடன் உள்ளது. இலங்கை அணி ஒரு வெற்றி கூட பெறாமல் உள்ளது.
இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் தலா நான்கு புள்ளிகளுடன் இருப்பதால், அவை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு மட்டுமே கடைசிப் போட்டி மீதமுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றாலும், அந்த அணியால் அதிகபட்சம் இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற முடியும்.
எனவே, அந்த இரண்டு புள்ளிகளை வைத்து இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாது. இந்திய அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தாலும், ஏற்கனவே நான்கு புள்ளிகள் எடுத்துள்ளதால், முதல் இரண்டு இடங்களில் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இதன் விளைவாக, வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவது உறுதியாகியுள்ளது. ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன
முன்னதாக, ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில், வங்கதேசத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், கடந்த 41 ஆண்டுகளில் 17 முறை ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்பட்டிருந்தாலும், முதல் முறையாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.
