பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் வெளிநாடு சென்றார்... ஜனாதிபதி பயணித்த அதே விமானத்திலா ? 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு சென்ற அதே விமானத்திலேயே நாமல் ராஜபக்ஷவும் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் வெளிநாடு சென்றார்... ஜனாதிபதி பயணித்த அதே விமானத்திலா ? 

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று திங்கட்கிழமை (28) காலை வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு சென்ற அதே விமானத்திலேயே நாமல் ராஜபக்ஷவும் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மாலைதீவுக்கு அரச முறைப் பயணமாகச் சென்று கொண்டிருந்து அதே நேரத்தில் நாமல் ராஜபக்ஷ ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள அங்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,  நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்தமையினால் அவருக்கு எதிராக நீதிமன்றம் இன்று பிற்பகல் பிடியாணை உத்தரவு பிறப்பித்தது. 

ஆனால், நாமல் ராஜபக்ஷ இன்று காலை வெளிநாடு சென்றுள்ளதால் நாளை செவ்வாய்க்கிழமை (29) தனது பிடியாணைக்கு எதிராக மனு தாக்கல் செய்து நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.