77 லட்சம் ரூபாய் மோசடி - நடிகை ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளர் கைது
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளராக பணியாற்றிய வேதிகா பிரகாஷ் ஷெட்டியை, மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளராக பணியாற்றிய வேதிகா பிரகாஷ் ஷெட்டியை, மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகை ஆலியா பட்டிடம் ரூ. 77 லட்சம் வரை மோசடி செய்ததாகவும், ஆலியா பட்டின் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் கணக்குகளில் முறைகேடுகள் செய்ததாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் முதல் 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்த மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலியா தற்போது 'ஆல்பா' படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP மற்றும் GOOGLE NEWS பக்கத்தில் இணையுங்கள்.